• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-12 20:17:40    
ஹய்நான் மாநிலத்தின் உயர் பயன் வாய்ந்த வேளாண் துறை

cri
காய்கறிகளும் வெட்ப மண்டலப் பழங்களும் அதிகமாக விளைவதால், மிக தெற்கு பகுதியிலுள்ள ஹய்நான் மாநிலம் சீனாவின் காய்கறி மற்றும் பழக் கூடையாக அழைக்கப்படுகின்றது. அதன் வேளாண் உற்பத்திப் பொருட்கள், சீனாவின் சுமார் 100 நகரங்களுக்கு வினியோகுவது மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷியா, ஜப்பான், தென் கிழக்காசியா உள்ளிட்ட ஏறக்குறைய 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்றன. 2007ம் ஆண்டு, ஹய்நான் மாநிலத்தின் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் 45 இலட்சியம் டனை எட்டியுள்ளன. ஏற்றுமதித் தொகை 40 கோடி அமெரிக்கா டாலரைத் தாண்டியுள்ளது. இது வரை, வெட்ப மண்டலத்தின் உயர் பயன் கொண்ட வேளாண் துறையின் வளர்ப்பது, ஹய்நான் மாநிலப் பொருளாராத்தின் முக்கிய உத்திப்பூர்வ திட்டமாக மாறியுள்ளது.

ஹய்நான் மாநிலத்தின் காய்கறிகளும் பழங்களும் சிறந்த தரங்களைக் கொள்கின்றன என்று ஹெநான் மாநிலத்தின் வணிகர் guozhiyao கடந்த நூற்றாண்டின் இறுதியில், சோதனை மூலம் கண்டறிந்தார். இம்மாநிலத்தின் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்பிரதேசத்தில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெறும். எனவே, ஹய்நான் மாநிலத்தில் வணிக நடவடிக்கைகளில் அவர் ஈடுபட வேண்டும். அவர் கூறியதாவது:

இதற்கு முன், பெருநிலப் பகுதியின் வேளாண் வர்த்தகச் சந்தையில் சோதனை செய்த போது, தலைசிறந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஹய்நான் மாநிலத்தில் காணப்படுவதை நான் கண்டறிந்தேண். இம்மாநிலத்தின் மேம்பாடுகளால் ஈர்த்து, நான் இம்மாநிலத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.

1999ம் ஆண்டு, Guozhiyao ஹய்நான் மாநிலத்தில் வேளாண் துறையின் வளர்ச்சித் தொழில் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். உள்ளூர் சந்தையின் தேவைகளின் படி, உற்பத்திப் பொருட்களை விவசாயிகள் அவரின் வழிகாட்டலோடு பயிரிடுகின்றனர். தற்போது, இந்நிறுவனத்தின் உற்பத்தித் தளத்தின் நிலப்பரப்பு 200 ஹெக்டரை எட்டியுள்ளது. குளிர்காலத்தின் காய்கறிகள் மட்டுமல்ல, விவசாயிகள் பயிரிடும் பல வெட்ப மண்டலப் பழங்கள், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வேளாண் உற்பத்தியின் பயிரிடுதலில் ஈடுபடும் பல நிறுவனம் ஹய்நான் மாநிலத்தில் காணப்பலாம். இதில் பெரும் பகுதி, கடந்த 90ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று ஹய்நான் மாநிலத்தின் வேளாண் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் chenyongwang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

குளிர்காலத்தின் போது, அதிகமான வெட்பம் மற்றும் மழை மூல வளங்கள் ஹய்நான் மாநிலத்தில் இடம்பெறுகின்றன. சாகுபடி முறை மேம்படுத்தப்படுவதன் மூலம், குளிர்கால வேளாண் துறை வளர்ந்து வருகிறது. இது விவசாயிகளின் வருமான அதிகரிப்பின் முக்கிய வழிமுறையாகும். அதேவேளையில், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.

பயிரிடுதல் விவசாயிகள் அதிகரிப்பதோடு, முதலில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தின. அறிவியல்பூர்வமான நிர்வாகம் பெறாமல், வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் உத்தரவாதம் செய்யப்பெறவில்லை. அதேவேளையில், விலை மிக மலிவானது. இத்தகைய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வேளாண் துறையின் சிறப்பு ஒத்துழைப்பு நிறுவனங்களை கட்டியமைப்பதை, ஹய்நான் மாநிலம் பரப்புகிறது. விவசாயிகளுக்கு தொடர்புடைய பயிற்சிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை இந்த ஒத்துழைப்பு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

வேளாண் துறையின் சிறப்பு ஒத்துழைப்பு நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று உள்ளூர் அரசாங்கம் கருதுகிறது. வேளாண் துறையின் சிறப்பு ஒத்துழைப்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உள்ளூர் அரசாங்கம் நிதிகளை வழங்கியுள்ளது என்று ஹய்நான் மாநிலத்தைச் சேர்ந்த chengmai மாவட்டத்தின் வேளாண் துறை பணியகத்தின் தலைவர் wangxirui தெரிவித்தார். அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு முதல் இது வரை, ஒவ்வொரு திங்களின் அல்லது இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட போது, அரசாங்கம் இந்நிறுவனங்களுக்கு நிதிகளை வழங்குகிறது என்றார் அவர்.

தற்போது, ஹய்நான் மாநிலத்தின் வெட்ப மண்டலத்தின் உயர் பயன் வாய்ந்த வேளாண் துறை, சந்தையை மேலும் விவாரிக்கும் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகிறது. 1998ம் ஆண்டு முதல் இது வரை, ஹய்நான் மாநிலத்தில் ஆண்டுதோறும் குளிர்கால வேளாண் உற்பத்திப் பொருட்களின் வர்த்தக பொருட்காட்சி நடைபெற்று, லட்சக்கணக்கான வேளாண் உற்பத்திப் பொருட்களின் முன்பதிவுப் படிவங்களை ஈர்த்து வருகிறது என்று இம்மாநில வேளாண் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் chenyongwang கூறினார்.

பல்வேறு நடவடிக்கைகளை ஹய்நான் அரசு மேற்கொண்டு, அறிவியல் பூர்வமான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதன் மூலம், வேளாண் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது என்று ஹய்நான் மாநில வேளாண் துறையின் செய்தித் தொடர்பாளர் chenyongwang கூறினார். அவர் கூறியதாவது:

ஆண்டுதோறும், பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு வெளியே சென்று, சந்தையின் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சியின் பயன்களின் படி, குளிர்காலக் காய்கறி மற்றும் பழங்களின் விற்பனைத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்தத் திட்டப்படி, கட்டமைப்பு சீர்திருத்தை விவசாயிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ரகம், விளைச்சளின் மற்றும் விற்பனை நேரம் என்றார் அவர்.

சந்தையின் தேவைபடி, வேளாண் துறையின் கட்டமைப்பை ஹய்நான் மாநிலம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. வேளாண் துறையின் வரையறைமயமாக்க உற்பத்தியை முன்னேற்றி, அறிவியல் தொழில் நுட்பத்தின் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும். நாட்டுத் தலைசிறந்த மாசுபட்டாற்ற வேளாண் உற்பத்திப் பொருட்களின் வினியோகத் தளத்தை ஹய்நான் உருவாக்கப் பாடுபட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் மேலதிகமான நன்மைகளைப் பெறலாம்.