• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-12 09:37:17    
வெளிநாட்டிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் 2

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது, ஒரு நகருக்கு செழுமையான மரபு செல்வங்களை வழங்கும் என்று, நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். உண்மை தான், அனைத்து ஒலிம்பிக் நகரங்களும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூலம் பல நன்மைகளை பெற முடியும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன்

மூலம், அனைத்து ஒலிம்பிக் நகரங்களும், ஒலிம்பிக் விளையாட்டுக்கு செழுமையான மரபு செல்வங்களை வழங்கும். சீன மக்களின் 100 ஆண்டு ஒலிம்பிக் கனவு நனவாக்கப்படவுள்ள போது, வெளிநாடுகளிலான தீபத் தொடரோட்டம் செய்தது. சுமார் 2000 தீபம் ஏந்தும் நபர்களின் தொடரோட்டத்தின் மூலம், 21 நகரங்களின் சிறப்புகள், உலக மக்களுக்கு முன் வெளியிக்காட்டப்பட்டன. இது, இந்நகரங்கள் மற்றும் இந்நாட்டு மக்களுக்கு செழுமையான மரபு செல்வங்களை வழங்கியுள்ளது. தீபத் தொடரோட்டத்தின் பெரும் செல்வாக்கு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் நகரின் மிக சிறந்த விளம் பரப்படமாகும். ஒலிம்பிக் தீபத்

தொடரோட்டத்தின் செல்வாக்கு, சுற்றுலா வளம் மற்றும் சந்தையை விரிவுபடுத்த விரும்பும் நகரங்களுக்கு சிறந்த பிரச்சார வாய்ப்பை வழங்கியது. ஓமன் தலைநகர் மஸ்கட், முதலாவதாக பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவுக்கு கடிதம் அனுப்பி, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், மஸ்கட் நகரில் நடைபெற வேண்டும் என்று விண்ணப்பம் செய்தது. வளைகுடாவில் அமைந்துள்ள ஓமன், ஆழமான வரலாற்று, பண்பாட்டு மரபுச் செல்வங்கள், அழகான இயற்கை காட்சிகள் ஆகியவற்றை கொண்டது. ஆனால், நீண்ட காலத்தில் மக்களால் அறியப்பட வில்லை. தீபத் தொடரோட்டம், ஓமனை பற்றி பிரச்சாரம் செய்யும் வாய்ப்பாக மாற

வேண்டும் என அவர்கள் ஆவலுடன் விரும்பினர். ஓமனிலுள்ள சீனத் தூதர் பேன் வேய் வான் கூறியதாவது— ஓமன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க விரும்புகின்ற நாடாகும். ஓமனின் வரவாற்று, நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை வெளியிட ஓமன் மக்கள் விரும்புகின்றனர். தீபத் தொடரோட்டம் ஓமனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று ஓமன் கருதுகிறது. தீபத் தொடரோடத்தை பயன்படுத்தி, ஓமன் மக்களின் கனவு படிப்படியாக நனவாக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.


உலக புகழ்பெற்ற சுற்றுலா நகரான பாங்காக், தீபத் தொடரோட்டத்தின் ஈர்ப்பு ஆற்றலை முழுமூச்சுடன் வெளியிட்டது. உலகம், இந்நகரின் அன்பால் ஈர்க்கப்பட்டது. தாய்லந்தின் அழகான இயற்கை காட்சி, ஆழமான பண்பாடு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாங்காக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை வெளியிட்டது என்று பாங்காக் நகரில் நடைபெற்ற தீபத் தொடரோட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் பண்பாடு மற்றும் விளையாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான துணை தலைவருமான சிரிபாஸ்ராபோன் தெரிவித்தார்.