பெய்ஜிங் நேரப்படி இன்று பிற்பகல் 2. 28 மணிக்கு சீனாவின் ஸுச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவுடைய நில நடுக்கம் ஏற்பட்டது. அத கடுமையாக இருந்ததால் சீனாவின் நிங்சியா, சிங்காய், ஷாங்காய் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புகள் பற்றி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
நில நடுக்கம் ஏற்பட்டதும் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் முக்கிய கட்டளை வெளியிட்டார். காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் நில நடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்கினார். சீன மக்கள் விடுதலை படையின் முதன்மை குழு உடனடியாக நிவாரண திட்டத்தை துவக்கியது. பாதிக்கப்ட்ட இடங்களின் விபரங்களை அறிந்து கொள்ள சங்து இராணுவ வட்டாரம் படையினரை அனுப்பியது. கெலிகாப்ட்டர்கள் மூலம் பாதிக்கப்ட்ட இடங்களின் நிலைமையை சேகரித்து வருகின்றன. பேரிடர் நீக்கப் பணியில் கலந்து கொள்ள ஐயாயிரத்துக்கும் அதிகமான படையினர் பாதிக்கப்ட்ட வென் சுவான் பிரதேசத்திக்கு விரைந்து சென்றுள்ளனர்.
சீன பொது துறு அமைச்சகம் நிவாரண பணி குழு ஒன்றை உருவாக்கி 5000 கூடாரங்களை திரட்டியுள்ளது. சீனச் செஞ்சிலுவை சங்கமும் இயற்கை சீற்ற விளைவை தணிவு செய்யும் திட்டத்தை துவக்கி சுமார் 8 இலட்சம் யுவான் மதிப்புள்ள பேரிடர் நீக்க நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளது.
|