• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 09:54:55    
தான் ச்சே கோயில் (ஆ)

cri

தான் ச்சே கோயில் கட்டிடங்கள், மலை மீது, கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உயரமாகவும், சில தாழ்வாகவும் இருக்கின்றன.

பெய்ஜிங்கின் அரண்மனை அருங்காட்சியகத்தில் 9999 அரை வீடுகள் பரவி கிடக்கின்றன. சிங் வம்சக்காலத்தில், தான் ச்சே கோயிலில் 999 அரை வீடுகள் இருந்தன. அவை, அரண்மனை அருங்காட்சியகத்தின் அறைகளை போன்ற மாதிரியுடையது. மிங் வம்சகாலத்தில் அதனைப் மாதிரியாகக் கொண்டு, அரண்மனை அருங்காட்சியகத்தைச் சீரமைத்தனர். தற்போது, இக்கோயிலில், 943 வீடுகள் உள்ளன. அவற்றில், பண்டை கால மண்டபங்களின் எண்ணிக்கை, 638 ஆக இருக்கின்றன. இக்கட்டிடங்கள், மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தின் கட்டிடப் பாணியை சார்ந்தவை. இக்கோயில், பெய்ஜிங் புறநகரிலுள்ள மிகப் பெரிய பண்டைகால கோயிலாகும்.

கோயிலின் வெளியே, கிழக்கு மற்றும் மேற்கில் Kwan-yin குகைகள், An Le Yan Shou மண்டபம், சுனை பொங்கும் ஊற்று முதலிய காட்சிகள் மற்றும் கட்டிடங்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம், பல பாணிகள் மற்றும் காட்சிகள் வாய்ந்த புகழ்பெற்ற சுற்றுலா இடமாக உருவாகியுள்ளன.

தான் ச்சே கோயிலின் மானிட வளம் செழுமையானது மட்டுமல்ல, இயற்கைக் காட்சிகளும் அழமாக இருக்கின்றன. வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் ஆகிய நான்கு காலங்களிலும், அக்காலத்திற்கேற்ற அழகான காட்சிகளை அளிக் கண்டுகளிக்கலாம். சிங் வம்சக்காலத்தில், தான் ச்சேவின் 10 காட்சி பகுதிகள், புகழ்பெற்றுள்ளன.

தனது புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளால், அது பயணியரை கவர்வதோடு, கடந்த சில ஆண்டுகளில், நவீனமயமான சுற்றுலா சேவை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, தங்குமிடம், உணவகம், சுற்றுலா முதலிய சேவைகளும் இருக்கின்றன. அது, சீனாவின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா இடமாக மாறியுள்ளது.