சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு, பெய்ஜிங் ஒலிமபிக் விளையாட்டு அமைப்புக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. ஆனால், சீனாவின் உள்நாட்டில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், இதனால் பாதிக்கப்படாது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
திட்டப்படி, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஜூன் திங்களில், சி ச்சுவான் மாநிலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான் யாங் உள்ளிட்ட சில நகரங்கள், ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரங்களில் இடம்பெறுகின்றன.
சி ச்சுவான் மாநிலத்திலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கடந்து செல்லவில்லை. எனவே, அது, பெரிதும் பாதிக்கப்படாது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி மையத்தின் பொறுப்பாளர் லி ச்சேன் ச்சுன் தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், திட்டப்படி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
|