• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 11:35:44    
பேரிடர் நீக்கப் பணி

cri

நேற்றிரவு, சீனாவின் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் குழு கூட்டம் நடத்தி, நிலநடுக்கத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

இராணுவப் படையினரும், மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரப் பணியார்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு விரைவாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும். அதேவேளையில், உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து, கூடாரம் ஆகிய நிவாரணப் பொருட்கள் அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் உடை, உறையுள், உணவு போன்ற பிரச்சினைகளை தடையின்றி தீர்ப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட வசதிகளும் சாதனங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்பட வேண்டும். அப்பிரதேசத்தின் நெடுஞ்சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் தண்ணீர் வசதிகள் மீட்கப்பட வேண்டும். நிலநடுக்க நிலைமையின் கண்காணிப்பு கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியான பேரழிவுகள் ஏற்படுவதை தடுக்க, பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கோரியது.