நேற்று பிற்பகல் 2:28 மணியளவில், சீனாவின் si chuan மாநிலத்திலுள்ள wen chuan மாவட்டத்தில் ரிச்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. வலுவான இந்த நிலநடுக்கத்தால் கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. நேற்றிரவு, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட si chuan மாநிலத்திலுள்ள du jiangyan நகர் சென்றடைந்து, நிலநடுக்கம் தொடர்பான பேரிடர் நீக்க பணிக்குத் தலைமை தாங்க துவங்கினார்.
பேரிடர் நீக்கப் படை அதிகாரிகளும் வீரர்களும், அனைத்து இன்னல்களையும் நீக்க வேண்டும் என்று வென்சியாபாவ் கோரினார். மனிதர்களைக் காப்பாற்றுவது முதன்மை கடமையாகும். நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, நிலநடுக்க மையம் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிரதேசங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டிய முக்கிய பிரதேசங்களாகும் என்று வென்சியாபாவ் கூறினார்.
|