• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 09:26:16    
சீனாவில் கடுமையான நிலநடுக்கம்

cri

சீன sichuan மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் நேற்று ரிச்டர் அளவையில் 7.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான இந்த நிலநடுக்கம் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்றிரவு 12 மணி வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். gansu, shanxi முதலிய பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சுமார் 180 பேர் இறந்தனர். தற்போது, பேரிடர் நீக்கப் பணியை, சீன அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டு வருகிறது.

நேற்றிரவு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டின் அரசியல் குழுவின் நிரந்தர குழு, கூட்டம் நடத்தி, பேரிடர் நீக்கப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனப் படையினர் உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது, சுமார் 20 ஆயிரம் படையினர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பேரிடர் நீக்கப் பணியின் முதல் நிலை எச்சரிக்கையை, சீன தேசிய பேரழிவு குறைப்பு கமிட்டி விடுத்துள்ளது. சீன பொதுத் துறை அமைச்சகமும், நிதித் துறை அமைச்சகமும், sichuanயில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, 20 கோடி யுவானை ஒதுக்கியுள்ளன.