• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 19:30:06    
ஜி லின் மாநிலத்தில் கிராமப்புற திறமைசாலிகளுக்கான பயிற்சி

cri
ஜி லின் மாநிலம் சீனாவின் வடக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய வேளாண் மாநிலமாகும். ஆனால், அங்கு கிராமப்புற நடைமுறைக்கு ஏற்ற திறமைசாலிகளின் எண்ணிக்கை குறைவு. இதர்காக, 2005ம் ஆண்டு ஊருக்கொரு பல்கலைக்கழக மாணவர் என்ற திட்டப்பணியை ஜி லின் மாநில அரசு துவங்கியது. கிராமப்புறங்களில், கல்வி, தொழில் நுட்பங்களைக் கற்றறிந்து தொழில் நடத்துவதில் ஈடுபடக் கூடிய விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது இத்திட்டப்பணியின் நோக்கமாகும்.

வேளாண் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டப்பணிக்கான செலவு முழுவதும் அரசால் ஏற்கப்படுகின்றது. மாணவர்கள் கட்டணம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. ஜி லின் வேளாண் பல்கலைக்கழகம், ஜி லின் வானொலி மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் சுன் நகர வேளாண் பள்ளி, யேன் பியன் பல்கலைக்கழகத்தின் வேளாண் ஆய்வகம் முதலிய 5 பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் இத்திட்டப்பணிக்குப் பொறுப்பேற்கின்றன. ஊருக்கொரு பல்கலைக்கழக மாணவர் என்ற திட்டப்பணி நடைமுறைக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில், 6000க்கு அதிகமான கிராமப்புற மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

இந்த 5 பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆசிரியர்களை அணித் திரட்டி, இந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றன. பயிற்சி திட்டத்தில் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஜி லின் வேளாண் அறிவியல் தொழில் நுட்பக் கல்லூரியின் துணை வேந்தர் மா லி ச்சுவான் அம்மையார் கூறியதாவது.

சிறப்பு துறை கல்வியைத் தவிர, மாணவர்களுக்காகத் தெரிவு வகுப்புகளை நடத்துகி்ன்றோம். அவர்களுக்கு வேளாண் தொழிலின் பல்வகை திறமைகளை வழங்குகின்றோம். ஏனென்றால், மாணவர்கள் கிராமப்புறங்களுக்குத் திரும்பிய பிறகு, வயலில் பயிர் செய்கையில் ஈடுபடக் கூடும். அதேவேளையில், வீட்டு வளர்ப்பு தொழிலிலும் ஈடுபடக் கூடும் என்றார் அவர்.

இதத் திட்டப்பணிக்குப் பொறுப்பேற்ற பல்கலைக்கழகங்கள், மாணவருக்கான நடைமுறை பயிற்சியில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. அதாவது, கிராமப்புறங்களிலிருந்து வந்த இந்த மாணவர்கள், கல்வி பெற்ற போது, வயலுக்குச் சென்று, வகுப்பில் கற்றுக்கொண்ட அறிவுகளை உண்மை நடைமுறையுடன் பயனுள்ள முறையில் இணைக்க வேண்டும். ஜி லின் மாநிலத்தின் சுன் யுவான் நகர் தா வா வட்டத்தின் மின் லெர் ஊரிலான அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, ஜி லின் வேளாண் பல்கலைக்கழகத்தின் முறையான பரிசோதனைத் தளமாகும். இப் பூங்காவின் துணை மேலாளர் cai de jun கூறியதாவது

கடந்த சில ஆண்டுகளாக, எமது தொழில் நுட்ப பூங்கா, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு பரிசோதனைத்தளத்தை வழங்கியுள்ளது. ஆண்டுதோறும், ஜி லின் வேளாண் பல்கலைக்கழகத்தின் சுமார் 30 மாணவர்கள் இங்கே வந்து பயிற்சி பெறுகின்றனர். தவிர, ஒவ்வொரு உள்ளூர் ஊரிலிருந்து ஒரு மாணவரும் இங்கே வந்து பயிற்சி பெறுகின்றார் என்றார் அவர்.

2 ஆண்டு கால கல்வி மற்றும் பயிற்சி மூலம், இவ்வாண்டு ஜுலை திங்கள், ஊருக்கொரு பல்கலைக்கழக மாணவர் என்ற பணித்திட்டத்தின் முதலாவது தொகுதி மாணவர்களாக 1525 பேர் பட்டம் பெற்று, சொந்த ஊருக்குத் திரும்பி ஆர்வத்துடன் தொழில் நடத்தத் துவங்கினர். ஜி லின் மாநில வேளாண் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்கள் சிலர் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, சொந்த ஊரில் தனது சிறப்பு திறமைகளை வெளிப்படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 2 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட அறிவுகளை விரைவில் நடைமுறையில் பயன்படுத்தலாம். என்னுடை பல விருப்பங்கள் நிறைவேற்றப்படும்.

தாய் ஊரில் மாடுகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளேன். ஊர் மக்களுக்குத் தலைமை தாங்கி வளம் அடையப் பாடுபடுவேன்.

கடந்த 2 ஆண்டு கால பல்கலைக்கழக வாழ்க்கை எனது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பமாகும். சொந்த ஊருக்குத் திரும்பி, கற்றுக்கொண்டதைப் பயன்படுத்த விரும்புகின்றேன் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாண்டு பட்டம் பெற்ற மாணவர்களில் 580 க்கு அதிகமானோர் சொந்தமாக தொழில் நடத்தும் திட்டப்பணிகளை உறுதிப்படுத்தியுள்ளனர். பல்வேறு நிலை அரசுகள் அவர்களுக்கு பல்வகை வசதிகளை வழங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக 2007ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களின் தொழில் நடத்தும் திட்டப்பணிகளில் மாநில அரசு 100 திட்டப்பணிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு முக்கிய ஆதரவு அளிக்கின்றது. ஜி லின் மாநிலத்தின் MEI HE KOU நகரின் கம்யூனிஸ்ட் கட்சி ஆணையத்தின் செயலாளர் WANG WEN MING கூறியதாவது

வேளாண் உற்பத்திப் பொருட்களைச் சோதனையிட்டு தரச்சான்று வழங்குதல், அத்தாட்சி பத்திரத்துக்கு அனுமதி வழங்குதல், பயிர் செய்கை மற்றும் வீட்டு வளர்ப்புத் தொழில் பற்றிய தொழில் நுட்ப ஆலோசனை முதலிய நடைமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு உதவியளிக்கின்றது. குறுகிய காலத்துக்குள் திட்டப்பணியின் அளவை விரிவாக்கப் பாடுபடுகின்றோம். ஆண்டுதோறும் நகர கம்யூனிஸ்ட் கட்சி ஆணையத்தின் கட்சி உறுப்பினர் சந்தா தொகையிலிருந்து ஒரு இலட்சம் யுவானை ஒதுக்கி வைத்து, சொந்த ஊருக்குத் திரும்பிய மாணவர்களின் வளர்ச்சி பணித்திட்டங்களை இலவசமாக ஆதரிக்கின்றோம். பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு இலட்சம் யுவானுக்குள்ளான நிபந்தனைக்கேற்ற கடன் தொகையை வழங்குகின்றோம் என்றார் அவர்.

அரசின் ஆதரவு பெற்ற கிராமப்புற மாணவர்கள், முழு நம்பிக்கையுடன் சொந்த ஊரின் வளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். 26 வயதான GAO JUN MING ஜி லின் மாநிலத்தின் NONG AN மாவட்டத்தின் KAI AN வட்டத்தின் GAO JIA tun ஊரைச் சேர்ந்தவராவார். 2005ம் ஆண்டு தேர்வின் மூலம் அவர் ஜி லின் வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பழ மர வளர்ப்பு பற்றி அவர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தற்போது, அமெரிக்க திராட்சை வளர்ப்பது பற்றிய வழிமுறையை அவர் கற்றறிந்துள்ளார். அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் மரங்களில் பழங்கள் கிடைத்து 20, 30 ஆயிரம் யுவான் வருமானம் கிடைக்கலாம். GAO JUN MING இன் தந்தை கூறியதாவது

1996ம் ஆண்டு முதல் பழ மரம் வளர்ப்பதில் ஈடுபடத் துவங்கினோம். பல ஆண்டு கால முயற்சி வெற்றி பெறவில்லை. 2005ம் ஆண்டு பழ மர ஆய்வகம் நிறுவப்பட்டது. அதே ஆண்டு ஊருக்கொரு பல்கலைக்கழக மாணவர் திட்டப்பணி துவங்கியது. மகனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினேன். உரிய நேரத்தில் சரியான வாய்ப்பு கிடைக்கப் பெற்றோம் என்றார் அவர்.

GAO JIA tun ஊரிலான இதர விவசாயிகள் இப்பணித்திட்டத்திலிருந்து நன்மை பெற்று வளம் அடையும் பாதையில் அடி எடுவைத்துள்ளனர். GAO JUN MINஇன் உதவியுடன், அமெரிக்க திராட்சை பயிரிட்டு, இவ்வாண்டுக்கான வருமானம் குறைந்தது 4,5 மடங்கு அதிகரித்துள்ளது என்று விவசாயி JING ZHAN HAI செய்தியாளரிடம் தெரிவித்தார்.

GAO JUN MING போன்ற ஊருக்கொரு பல்கலைக்கழக மாணவர் எனும் திட்டப்பணியின் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். பட்டம் பெற்ற பின் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி, புதிய தொழில் நுட்பத்தை ஆய்வு மேற்கொண்டு பரவல் செய்து, விவசாயிகளுக்குத் தலைமை தாங்கி வளம் அடையும் தலைவர்களாக மாறியுள்ளனர்.

ஜி லின் மாநிலத்தில் கிராமப்புறங்களின் நடைமுறை திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி பூர்வாங்க ரீதியில் பயன் பெற்றுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், மேலும் அதிகமான விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள், சொந்த ஊரின் வளர்ச்சிக்கு பங்கு ஆற்றுவர் என்பது மது நம்பிக்கை, நேயர்கள் இதுவரை, ஜி லின் மாநிலத்தில் கிராமப்புறத் திறமைசாலிகளுக்கான பயிற்சி பற்றி கேட்டீர்கள்.