• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 09:31:50    
கொரிய இன உணவு வகை

cri

க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் இன்னொரு சுவையான உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – ஆமாம். எமது நிகழ்ச்சி உங்களுக்கு உற்சாலத்தையும் மகழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றோம்.
க்ளீட்டஸ் – வாணி, இன்று எந்த வகை உணவு பற்றி கூறுகின்றோம்?
வாணி – இன்று கொரிய இன உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.


க்ளீட்டஸ் – அப்படியா? அதன் தனிச்சிறப்பு என்ன?
வாணி – இந்தியாவில் பஜ்ஜி என்னும் ஒரு உணவு வகை உள்ளது. அல்லவா?இன்று அறிமுகப்படுத்தப்படும் உணவு இதை போன்றதே
க்ளீட்டஸ் – நல்லது. தேவையான பொருட்களை நீங்கள் கூறுங்கள்.
வாணி – கூறுகின்றேன்.
கோதுமை மாவு 100 கிராம்
முட்டை 2
வெங்காயம் போதிய அளவு
கெரட் அரை பகுதி
உணவு எண்ணெய் 1 தேக்கரண்டி
உப்பு போதிய அளவு 


வாணி – வழக்கத்தின் படி, முதலில், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உலர்ந்த பின், இவற்றை தனித்தனியாக மெல்லிய நூடுல்ஸ் அளவாக நறுக்கவும்.
க்ளீட்டஸ் -- முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்து கிளற வேண்டும்.
வாணி – கோதுமை மாவை பாத்திரத்தில் வைத்து, இதில் 100 மில்லி தண்ணீரையும்

நன்றாக அடித்த முட்டைகளையும் ஊற்றி, மெதுவாக கிளற வேண்டும்.
க்ளீட்டஸ் – எத்தனை நிமிடங்கள் இப்படி செய்ய வேண்டும்?
வாணி – நன்றாக கிளற வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் தேவை.
க்ளீட்டஸ் – அடுத்து, நறுக்கப்பட்ட வெங்காயம், கேரட் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும், அப்படித்தானே?
வாணி – ஆமாம். தவிர, உப்பையும் சேர்க்கவும்.
க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் உணவு எண்ணெயை ஊற்றவும்.
வாணி – பிறகு, கிளறப்பட்ட மாவு கரைசலை இதில் ஊற்றலாம். இதன் அடர்த்தி சுமார் 0.5 சென்டி மீட்டர் அளவாக அமைக்கவும். ஒரு பக்கம் பொன் நிறமாக மாறிய பின், மெதுவாக இதனை மறு பக்கமாக திருப்பி வறுக்கவும். இரண்டு பக்கங்களும் பொன் நிறமாகி வறுக்கப்பட்ட பின், வெளியே எடுக்கலாம்.

க்ளீட்டஸ் – வறுக்கப்பட்டதை சிறிய அளவாக அரி்ந்து கொள்ளலாம். இவற்றைத் தட்டில் வைக்கலாம். இப்போது, இன்றைய பஜ்ஜி தயார். 

வாணி – எப்படி, நேயர்களே. இன்றைய உணவு வகையின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது. அல்லவா?
க்ளீட்டஸ் – மேலும் இதற்கான குறிப்புகள்.
வாணி – உணவு வகையை வறுக்கும் போது, தோசைக் கரண்டி மூலம் இதனை அழுத்தலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பஜ்ஜி சுவையானது. மேலும், மாவு கரைசலுக்குச் சரியான அளவு நீர் தேவை.

க்ளீட்டஸ் – சரி, நேயர்களே. இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சி பற்றி கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.