• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 16:45:47    
பேரிடர் நீக்கப் பணியிலுள்ள சீன அரசும் மக்களும்

cri

பெய்ஜிங் நேரம் மே 12ம் நாள் பிற்பகல் 2.28 மணிக்கு சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவயில் 7.8 ஆக பதிவான நில நடுக்கம் நிகழ்ந்தது. பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் நகரங்கள் அதனால் பாதிக்கப்பட்டன. சீன பொது துறை அமைச்சகம் மேற்கொண்ட புள்ளிவிபரங்களின் படி, சி ச்சுவான், கேன்சு, சான்சி, சுங்சிங் முதலிய மாநிலங்கள் மற்றும் மாநகரத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்தனர். 5 இலட்சத்த்துக்கும் அதிகமான வீடுகள் நாசமாயின. இம்முறை நிகழ்ந்த நில நடுக்கத்தின் மையம் அமைந்த வென் சுவான் மாவட்டம் மாநிலத் தலைநகர் சுங்து நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் மக்கள் தொகை ஒரு இலட்சத்து 10 ஆயிரமாகும்.

நிலநடுக்கம் நிகழ்ந்த பின் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் காயமுற்றவர்களை காப்பாற்ற தொடர்புடைய வாரியங்களுக்கு உடனடியாக கட்டளை பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் உயிர் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதற்காக பேரிடர் நீக்க ஆணையம் நிறுவப்பட்டது. தலைமை அமைச்சர் வென் சியாபாவ் தலைமை தளபதியாக பணிபுரிய பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு விரைந்து சென்றார். பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டுள்ள படையினரும் தளபதிகளும் இன்னல்கள் அனைத்தையும் பொருட்படுத்தாமல் நடந்தாவது கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அவர் கூறியதாவது.
 


முதலில் மக்களை காப்பாற்ற வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட மைய பகுதி, தொடர்பு கொள்ளா இயலாத நிலையிலுள்ள இடங்கள் ஆகியவற்றிலான மனிதர்களை காப்பாற்ற வேண்டும். படையினர் எல்லா வழிகளிலும் விரைந்து சென்று மக்களை கூடுதலாக காப்பாற்ற வேண்டும் என்று வென்சியாபாவ் கோரினார்.
தலைமை அமைச்சர் வென்சியாபாவ் மருத்துவ மனைகள், பள்ளிகள் முதலிய இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அவர்களிடம் பேரிடர் நீக்கப் பணியின் போக்கை விவரித்தார். 1 விழுக்காட்டு விருப்பம் இருந்தால் நூறு மடங்கு முயற்சியை மேற்கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
12ம் நாளிரவு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர கமிட்டி கூட்டம் நடத்தி பேரிடர் நீக்கப் பணி பற்றி மேலும் ஏற்பாடு செய்தது. படையினரும் மருத்துவ ஊழியர்களும் முடிந்த வரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று காயமுற்ற மக்களை காப்பாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் வகையில்  உணவுப் பொருட்கள், குடி நீர், மருந்துகள் கூடாரங்கள் போன்ற நிவாரணப் பொருட்களை அனுப்ப வேண்டும். சீர்குலைக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் சீக்கிரமாக செப்பனிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் போக்குவரத்து மின்சார விநியோகம், தொலை தொடர்பு நீர் விநியோகம் ஆகியவற்றை வேகமாக மீட்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் கடமைகளை நிறைவேற்ற செயல்பாடுகளில் இறந்தியுள்ளன. சுமார் 20 ஆயிரம் விடுதலை படையின் வீரர்களும் ஆயுத காவற்துறையினரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று பேரிடர் நீக்கப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். நில நடுக்கத்திற்கு எதிரான சீன அரசு அவசர மீட்பு அணியும் அங்கே சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
13ம் நாள் நள்ளிரவு தாண்டி 35 நிமிடத்தில் முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் சி ச்சுவான் மாநிலத்தின் செஞ்சிலுவை சங்கத்தால் அனுப்பப்பட்டன. சங்கத்தின் துணை தலைவர் சான் போ அம்மையார் கூறியதாவது.


கடுமையாக பாதிக்கப்பட்ட வென் சுவான் மாவட்டத்திற்கு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்ப வேண்டும். அங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நமது முடிந்த வரை அம்மாவட்டத்தை நெருங்கிச் செல்ல வேண்டும். நாம் தலைமை செஞ்சிலுமை சங்கம், சர்வதேச சம்மேளனம், ஹாங்காங் மகௌ செஞ்சிலுவை சங்கங்கள் பல்வேறு மாநில செஞ்சிலுவை சங்கங்கள் ஆகியவற்றுக்கு அவசர வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 30 லட்சம் யுவான் எங்களுக்கு கிடைத்துள்ளது. நிவாரணப் பொருட்களை உடனடியாக விநியோகிப்போம் என்று அவர் கூறினார்.
இப்போது சி ச்சுவான் மாநிலத்தின் சங்து நகரில் நகரவாசிகள் தற்காலிக இரத்தம் சேமிப்பு வங்கிக்கு சென்று இரத்ததானம் செய்கின்றார்கள். வறுமை ஒழிப்பு நிதியம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் கலை இலக்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்களும் அவசர நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். சீனாவின் பின் ஆன் காப்புறுதி குழுமம், சின்லாங் இணையம் முதலிய தொழில் நிறுவனங்கள் நன்கொடை பணத்தையும் பொருட்களையும் அணிதிரட்டியுள்ளன. ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் செஞ்சிலுவை சங்கம் 5 இலட்சம் யுவான் நன்கொடையாக வழங்கியுள்ளது.