• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 18:26:55    
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கலின் நிலைமை

cri

சீன பொது துறை அமைச்சகத்தின் நிவாரண ஆணையத்தின் தலைவர் சுவான் ச்சுன் யௌ இன்று பெய்ஜிங்கில் நில நடுக்க நிலைமை  பற்றி அறிவித்தார். நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 921 தாண்டியது.
நேற்றிரவு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர குழு நடத்திய கூட்டத்தில், தங்களால் இயன்ற அளவில் காயமுற்றோரை காப்பாற்றி, நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை குறைக்க வேண்டும் என்று கோரியது.


சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் தலைமையிலான பேரிடர் நீக்கம் பற்றிய தலைமையகம் உருவாக்கப்பட்டது. வென்சியாபாவ்  பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்குகின்றார்.
இந்த நிலநடுக்கம் மிகக் கடுமையான இயற்கைச் சீற்றமாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஆதரிப்பதற்காக, சீன அரசு தங்களால் இயன்ற அளவில் மனித மற்றும் பொருள் உதவியை ஏற்பாடு செய்கின்றது என்று வென் சியாபாவ் இன்று காலை தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2:57மணி வரை, பல்வேறு பேரிடர் நீக்கப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், நில நடுக்கத்தால், துண்டிக்கப்பட்ட உள்ளூர் போக்குவரத்து மற்றும் செய்தித்தொலைத் தொடர்பு, மழையால் ஏற்பட்ட கடுமையான கால நிலை ஆகியவை மீட்புதவிப் பணிக்கு கடும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிய வருகின்றது.
பேரிடர் நீக்கப் பணியை பன்முகங்களிலும் மேற்கொள்ளும் வகையில், இன்றிரவு 12மணிக்குள், தடைகளை அகற்றி இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு செல்லும் பாதைகளை செப்பனிட்டு திறக்க வேண்டும் என்று வென் சியாபாவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
17 ஆயிம் சீன மக்கள் விடுதலைப் படை வீரர்கள் மற்றும் ஆயுதக் காவற்துறையினர் பேரிடர் நீக்கப் பணியில்  ஈடுப்பட்டுள்ளனர். தவிரவும், 34 ஆயிரம்  இராணுவ தளபதிகளும் வீரர்களும் விமானம் தொடர் வண்டி மற்றும் செல்லக் கூடிய வழிமுறைகள் அநைத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதுவரை 1800க்கு அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்., சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பயணியர் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் ஏதும் இல்லை.