மத்திய தொழில் நிறுவனங்களின் ஆதரவு
cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நில நடுக்கம் நிகழ்ந்த பின் சீனாவின் பல்வேறு மத்திய தொழில் நிறுவனங்கள் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்துள்ளன. சீன செல்லிட தொடர்பு குழுமத்தின் பொறுப்பாளர் ஒருவர் பேசுகையில் நாட்டிலுள்ள 4000 நிலையங்களின் சேவை நில நடுக்கத்தால் துண்டிக்கப்பட்டது. அவசரமாக செப்பனிடப்பட்ட பின் 13ம் நாள் காலை 8 மணிக்கு மூன்றில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிகழ்ந்த இடங்களில் தொலை தொடர்பு தடையின்றி இயங்கும் வகையில் சீன தொலை தொடர்பு குழுமம் அவசரமாக 350 செயற்கை கோள் மூலம் இயங்கும் தொலை பேசிகளை அங்கே அனுப்பியது. சுயுவான் குழுமகம் சி ச்சுவானுக்கு ஒரு கோடி யுவான் நன்கொடை அளித்தது.
|
|