• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 13:05:12    
மீட்புதவிப் பணிக்கான சர்வதேச உதவி

cri

சீன சி ச்சுவான் மாநிலத்தின் wen chuan மாவட்டத்தில் நேற்று கடுமையான நில நடுக்கம் நிகழ்ந்தது. அது ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகள் மற்றும் அரசுத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து சீன தரப்பிடம் ஆறுதலை தெரிவித்து, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் நேற்று சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சே சியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஐ.நாவின் சார்பில் அவர் சீன அரசு மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். சீன அரசு மற்றும் தலைவர்களின் வலுவான தலைமையில், இப்பிரதேசத்தின் மக்கள் இன்னல்களைச் சமாளித்து தங்களது சொந்த ஊரை செப்பனிடுப்பது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சீனாவின் மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிக்கு ஐ.நா முழு மூச்சுடன் உதவி அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய தலைமை அமைச்சர் Fukuda Yasuo சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், தலைமை அமைச்சர் வென் சியாபாவ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி, இந்நிகழ்ச்சி குறித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். ஜப்பான் இயன்ற அளவில் சீனாவுக்கு உதவி அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ்.W.புஷ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோருக்கு இரங்கலை தெரிவித்தார். மேலும் இதில் ஏற்பட்ட கடும் மனித மற்றும் உடைமை இழப்புக்கும் அவர் வருத்தம் கூறி பாதிக்கப்ப்ட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்தார். நிலநடுக்கத்தின் பாதிப்பைச் சமாளிக்க உதவி அளிப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் மெட்வதேவ், ஹு சிந்தாவுக்கு செய்தி அனுப்பி, சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் குறித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளிக்ககும் வருப்பத்தை அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்தின் நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய மனிதநேய உதவி பிரிவு கவனித்து வருவதாக இந்த அறிக்கை கூறியது. உதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் எப்போதும் தயாராக இருக்கின்றது என்று வளர்ச்சி மற்றும் மனிதநேய உதவிப் பணிக்குப் பொறுப்பான இதன் உறுப்பினர் மிச்சேல் கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரோக் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இயற்கைச் சீற்றத்தைச் சமாளிப்பதில், சீன மக்களுடன் நெருக்கமாக ஒன்றிணைய தனது கமிட்டி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் செய்தி அறிக்கை வெளியிட்டு, சிச்சுவான் மாநிலத்துக்கு இதயப்பூர்வமான ஆறுதலை தெரிவித்தது. சீனாவின் நிவாரணப் பணிக்கு உதவி அளிக்க விரும்புவதாகவும் அறிக்கை கூறியது.

ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுசேனி, ஈரான் அரசு மற்றும் மக்களின் சார்பில், சீனத் தரப்பிடம் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சீன மக்கள் கூடிய விரைவில் மீட்கப்பட்டு, குடும்பங்களை மீண்டும் கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

தவிர, பிரான்ஸ் அரசுத் தலைவர் சார்கோசி, பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷராபு மற்றும் தலைமை அமைச்சர் ஜிரானி, ஜெர்மன் தலைமை அமைச்சர் மெர்க்கல் அம்மையார், ஸ்லோவினியா தலைமை அமைச்சர் சான்சா, போலந்து அரசுத் தலைவர் காசின்ஸ்க்கி, செர்பிய அரசுத் தலைவர் காடிச், குவேட் எமிர் சபாஹ் முதலியோர் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுக்கு ஆறுதல் செய்திகளை அனுப்பினர். அவர்களில் பலர் சீனாவுக்கு உதவி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்ரேல், துருக்கி, சிங்கப்பூர், குவேய், கொலம்பியா, அர்ஜென்டீனா முதலிய நாடுகளும் சீனாவுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளன.

நேற்று, சீன சி ச்சுவான் மாநிலத்தில் ரிச்டர் அளவையில் 7.8 அளவில் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்த போது, பெய்ஜிங், ஷாங்காய், கான் சு, சான் சி, ச்சான் சி, முதலிய பல மாநகரங்கள் மற்றும் மாநிலங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. வியாட்நாம், தாய்லாந்து ஆகியவற்றிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இன்று காலை 7 மணி வரை, சுமார் 10 ஆயிரம் பேர் இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு கடுமையாக உள்ளது. மக்கள் குழுமி வாழும் இடத்தில் நிகழ்ந்தது. நிலநடுக்கத்தின் மையம் குறிப்பிட்ட அளவில் ஆழமில்லாத இடத்தில் உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வுப் பணியகம் கூறியது. நில நடுக்கத்தின் மையம் குறிப்பிட்ட அளவில் ஆழமில்லாத இடத்தில் உள்ளது. ஆகையால், இந்த நிலநடுக்கம் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகின்றது.