• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 10:37:38    
சீனத் தலைமை அமைச்சரின் கோரிகை

cri

மே 13ம் நாள் காலை 7மணிக்கு, சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்கம் பற்றிய முன்னெச்சரிக்கை தலைமையகத்தின் கூட்டத்தை சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் மீண்டும் நடத்தினார். நேற்று சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நில நடுக்கமே மிகக் கடுமையான இயற்கைச் சீற்றமாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஆதரிப்பதற்காக, சீன அரசு தங்களால் இயன்ற அளவில் மனித மற்றும் பொருள் வளங்களை ஏற்பாடு செய்கின்றது என்று வென் சியாபாவ் தெரிவித்தார்.

நில நடுக்கத்தால், துண்டிக்கப்பட்ட உள்ளூர் போக்குவரத்து மற்றும் செய்தித்தொடர்பு, மழையால் ஏற்பட்ட கடுமையான காலநிலை ஆகியவை, மீட்புதவிப் பணிக்கு மிகப் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிய வருகின்றது.

பேரிடர் நீக்கப் பணியை பன்முகங்களிலும் மேற்கொள்ளும் வகையில், 13ம் நாளிரவு 12மணிக்குள், தடைகளை அகற்றி இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு செல்லும் பாதைகளை செப்பனிட்டு திறக்க வேண்டும் என்று வென் சியாபாவ் கோரிக்கை விடுத்தார்.

13ம் நாள் அதிகாலை 6: 30மணி வரை, பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்துள்ள சீன மக்கள் விடைதலைப் படை வீரர்கள் மற்றும் ஆயுத காவற்துறையினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17ஆயிரத்தை எட்டியுள்ளது. தவிரவும், 34ஆயிரம் படை அதிகாரிகளும் வீரர்களும்,  பல்வேறு வழிமுறைகள் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.