நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப் பணிக்கு உதவி அளிப்பதற்காக, 86கோடி யுவான் மதிப்புள்ள நிதியுதவி வழங்க முடிவு செய்வதாக சீன நடுவண் நிதித் துறை இன்று அறிவித்தது.
இவ்வுதவி நிதியுதவியில் 70கோடி யுவான் தொகை, சிச்சுவான் மாநிலத்திலான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப் பணி, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
இதர 16கோடி யுவான், கான் சு, சாங் சி, யுன்னான், சுங்சின் முதலிய மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கான அவசர உதவி நிதியாகும் என்று தெரிய வருகின்றது.
|