இன்று பிற்பகல் 2 மணிக்கு, சீன சமூகத்தின் பல்வேறு தரப்புகள், சிச்சுவான் மாநில நிலநடுக்க பிரதேசத்தின் நிவாரணத்திற்கு வழங்கிய 6 கோடியே 50 இலட்சம் யுவான் மதிப்பான பொருட்களை சீன செஞ்சிலுவை சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நேற்று சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுன் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், அதற்கு சீன சமூகத்தின் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாக நிவாரண பொருட்கள் வழங்குமாறு சீன செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அதனை சீன சமூகத்தின் பல்வேறு தரப்புகள், ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, நிவாரண பொருட்களை நன் கொடையாக அளித்து வருகின்றனர்.
|