அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ் W புஷ் நேற்றிரவு சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி, சீன மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. பேரிடர் நீக்கப் பணிக்கு, அனைத்து உதவிகளையும் வழங்க விரும்புகிறது என்று புஷ் தெரிவித்தார்.
ஹு சிந்தாவ் அதற்கு நன்றி தெரிவித்தார். கடும் நிலநடுக்கத்தால் உடன்பிறப்புகள் உயிரிழந்தது பற்றி சீன மக்கள், சோகமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒழுங்கு இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புவதற்காக, நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியை சீன அரசு முழு மூச்சுடன் ஏற்பாடு செய்து, காயமுற்றோரைக் காப்பாற்றி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களின் வாழ்க்கையை ஏற்பாடு செய்து வருகிறது என்று ஹு சிந்தாவ் சுட்டிக்காட்டினார்.
திபெத் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை, ஹு சிந்தாவ் விளக்கிக் கூறினார். திபெத் விவகாரம், சீனாவின் உள்விவகாரமாகும். அது சீன மக்களின் உணர்வைப் பாதிக்கிறது. அமெரிக்கா, புறநிலையான, நியாயமான மனப்பான்மையுடன், கவனமாகவும் உரிய முறையிலும் தொடர்புடைய பிரச்சினைகளைக் கையாண்டு, சீனாவின் நேர்மையான நிலைப்பாட்டை புரிந்துணர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும் ஹு சிந்தாவ் சுட்டிக்காட்டினார்.
|