• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 10:18:45    
உயிர் பாதை

cri
முதலாவது மீட்புதவிப் படை, நேற்றிரவு 11:15 மணிக்கு வென் ச்சுவான் மாவட்டம் சென்றடைந்ததுடன், சி ச்சுவான் கடும் நிலநடுக்கத்தின் மையமான ஆ ப்பா திபெத் மற்றும் ச்சியாங் இனத் தன்னாட்சிச் சோவின் வென் ச்சுவான் மாவட்டத்தின் உயிர் பாதை, திறந்து விடப்பட்டது.

வென் ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், போக்குவரத்து, மின்சாரம், செய்தித்தொடர்பு ஆகிய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்துக்கு மேலான மக்கள் தொகை கொண்ட வென் ச்சுவான் மாவட்டம், வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளது.

நேற்று பிற்பகல், 30 பேர் கொண்ட முன்னேற்பாட்டுப் படை, கால் நடையாக வென் ச்சுவான் மாவட்டத்தின் யீங் சியூ நகரில் நுழைந்து, காயமுற்ற 300 பேரைக் காப்பாற்றியுள்ளது.

நேற்று நண்பகல், ஆ ப்பா திபெத் மற்றும் ச்சியாங் இனத் தன்னாட்சிச் சோ அரசு மற்றும் வென் ச்சுவான் மாவட்டத்தின் தலைவர்கள், செயற்கைக் கோள் தொலைபேசி மூலம், தொடர்பு கொண்டுள்ளனர். உள்ளூரில் தற்காப்பு மீட்புதவி மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்து கொண்டிருக்கின்றனர். நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலான யீங் சியூ, சுவான் க்கோ, ஓ லோங் முதலிய இடங்களின் 60 ஆயிரம் பேர் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என்று வென் ச்சுவான் மாவட்டத்தின் தலைவர் ஒருவர் கூறினார்.