• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 09:28:32    
பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பது

cri

புள்ளி விபரங்களின் படி, 13ம் நாள் இரவு 7 மணி வரை, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 12 ஆயிர்தது 12 பேர் உயிரிழந்தனர். 9 ஆயிரத்துக்கு மேலானோர் அபாயத்திலிருந்து விடுபடாமல் புதையுண்டுள்ளனர். 7 ஆயிரத்து 841 பேர் காணாமல் போயினர்.


இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளவர்களை தொடர்புடைய வாரியங்கள் இயன்ற அளவில் காப்பாற்ற வேண்டும் என்று சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்ட சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் கோரிக்கை விடுத்தார்.


நேற்றிரவு, தலைமையமைச்சர் வென் சியா பாவ் தொடர் வண்டியில் அரசவையின் நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணி ஆணையகத்தில் கூட்டம் நடத்தினார். பொது மக்களை காப்பாற்றுவது, தற்போதைய மிக முக்கிய கடமையாகும். இத்தகைய பெரும் நிலநடுக்கத்தில் காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை இயன்ற அளவில் குறைக்கப் பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.


ஏறக்குறைய 20 ஆயிரம் சீன மக்கள் விடுதலைப் படைவீரர்கள், ஆயுதக்காவற்துறையினர் மற்றும் அதிகாரிகள் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மேலும் 20 ஆயிரம் பேர் அங்கு சென்றடைவர்.