• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 10:04:31    
நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணி

cri

நாடு அளவில், அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலநடுக்க பேரிடர் மீட்புப் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று சீன மக்கள் நாளேடு இன்று வெளியிட்ட கட்டுரை ஒன்று தெரிவித்தது.


மே திங்கள் 12ம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் ரிக்டர் அளவையில் 7.8 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இக்கட்டுரை தெரிவித்தது. சீனாவின் பல மாநிலங்களும், பிரதேசங்களும், நகரங்களும் இந்நிலநடுக்கத்தை உணர்ந்தன. கடந்த பல பத்து ஆண்டுகளில், அரிதாகக் காணப்பட்ட இந்நிலநடுக்கத்தால் பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று இக்கட்டுரை தெரிவித்தது.


எதிர்பாராத இந்தப் பேரழிவின் போது, பல்வேறு நிலை அரசாங்கங்கள் மற்றும் நடுவண் அரசின் தொடர்புடைய வாரியங்கள் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணி தற்போதைய முதன்மை கடமையாக மாற்ற வேண்டும். இப்பேரழிவால் ஏற்பட்ட சீர்குலைவை மிகக் குறைந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கட்டுரை கூறியது.