• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 12:34:10    
சீனாவின் நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணி

cri

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் 12ம் நாள் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீன அரசின் தலைமையில் பேரிடர் நீக்கப் பணி, நாடு முழுவதிலும் இயன்ற அளவில் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம், உலக சுகாதார அமைப்பு, ஐ.நாவின் சர்வதேச பேரழிவுத் தடுப்பு உத்தி நிறுவனம் ஆகியவை இதை வெகுவாகப் பாராட்டின.


ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Elisabeth byrs அம்மையார் இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான நிபுணர்களின் சிறப்புக் குழுவை இந்த அலுவலகம் சீனாவுக்கு அனுப்பி, தொடர்புடைய தரப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.


சீனாவிலுள்ள நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியில் தாம் மிகுந்த நம்பிக்கை கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் fadela chaib அம்மையார் தெரிவித்தார்.