• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 09:33:14    
கடும் நிலநடுக்கம்

cri
சீனாவின் si chuan மாநிலத்திலுள்ள wen chuan மாவட்டத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பிரிட்டன், நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து முதலிய பல நாட்டு செய்தி ஊடகங்கள், இந்த நிலநடுக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. சீன அரசின் பேரிடர் நீக்க பணியைப் பற்றி, சில செய்தி ஊடகங்கள், வெகுவாக பாராட்டியுள்ளன.
சீனாவின் si chuan மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவுக்கான சீன அரசின் விரைவான நடவடிக்கையைப் பிரிட்டனின் the times நேற்று வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை பாராட்டியது. சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், விமானத்தின் மூலம், பெய்சிங்கிலிருந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மிக விரைவாகச் சென்றடைந்தார் என்று இக்கட்டுரை கூறியுள்ளது.
நியூசிலாந்தின் முக்கிய செய்தி ஊடகங்கள் நேற்று si chuan மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையை அறிவித்துள்ளன. அதே வேளையில், பேரழிவு நெருக்கடியைச் சமாளிக்கும் சீன அரசின் ஆற்றலை இச்செய்தி ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.