சீனாவின் si chuan மாநிலத்திலுள்ள wen chuan மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பேரிடருக்கான மீட்புதவி மற்றும் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், சீனாவுக்குச் சர்வதேசச் சமூகம் நிவாரணப் பொருட்களையும் நிதி உதவியையும் வழங்கி வருகின்றது. ரஷிய அவசர நிலைமை அமைச்சகம், விமானத்தின் மூலம், மாஸ்கோவிலிருந்து சீனாவுக்கு பேரிடர் நீக்கப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஜப்பானிய பல்வேறு கட்சிகளும், உள்ளூர் அரசுகளும், நண்பர்களும், பேரிடரில் உதவும் வகையில், சீனாவின் பாதிக்கப்ட்ட பிரதேசங்களுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். கம்போடிய அரசுரின் தந்தை Norodom sihanouk, தன் சார்பில் கம்போடியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, 10 இலட்சம் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனம், 2 இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
|