சீனாவின் si chuan மாநிலத்தின் wen chuan மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து முதலிய பல நாடுகளின் செய்தி ஊடகங்கள், 13ம் நாள் இந்த நிலநடுக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தி, சீன அரசின் பேரிடர் நீக்கப் பணியை வெகுவாக பாராட்டின. இன்று சிங்கப்பூர் செய்தி ஊடகம், கட்டுரையை வெளியிட்டு, சீன அரசின் பேரிடர் நீக்கப் பணியைப் பாராட்டியது. Associal press நிறுவனத்தின் கட்டுரை ஒன்று, சீன அரசின் விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான சீன அரசின் விரைவான மீப்புதவி நடவடிக்கை, சீனத்தலைவர்கள், பேரிடர் நீக்கப் பணிக்கு அளித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று இச்செய்தி நிறுவனம் கூறுகின்றது. சீனாவின் si chuan மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவுக்கான சீன அரசின் விரைவான நடவடிக்கையைப் பிபிசி செய்தி ஊடகமும் the times என்றும் செய்தியேடும் நேற்று கட்டுரை வெளியிட்டு பாராட்டின. நியூசிலாந்தின் முக்கிய செய்தி ஊடகங்கள் நேற்று si chuan மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையை அறிவித்தன. அதே வேளையில், பேரழிவு நெருக்கடியைச் சமாளிக்கும் சீன அரசின் ஆற்றலை இச்செய்தி ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
|