சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பேரிடருக்கான மீட்புதவி மற்றும் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், சீனாவுக்குச் சர்வதேசச் சமூகம் நிவாரணப் பொருட்களையும் நிதி உதவியையும் வழங்கி வருகின்றது. ரஷிய அவசர நிலைமை அமைச்சகம், விமானத்தின் மூலம், மாஸ்கோவிலிருந்து சீனாவுக்கு பேரிடர் நீக்கப் பொருட்களை அனுப்பியுள்ளது. தாய்லாந்து, பெல்ஜியம், போலந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனம், அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன், ரஷியா முதலிய பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும், சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி வழங்க அறிவித்துள்ளன. ஜப்பானின் பல்வேறு கட்சிகளும், உள்ளூர் அரசுகளும், நண்பர்களும், உதவும் வகையில், சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். கம்போடிய அரசரின் தந்தை Norodom sihanouk, தன் சார்பில் கம்போடியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கினார்.
|