• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 09:26:21    
வெளிநாட்டு வாழ் சீனரின் ஆறுதல்

cri

சீன sichuanமாநிலத்தின் wenchuan யில் நிகழ்ந்த நிலநடுக்கம் பேரளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் கிடைத்த பின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பாகிஸ்தான், மியன்மார், மலேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் மாணவர்களும், கின்சாசா காங்கோவிலுள்ள சீன அமைதி காப்புப் படையினரும், அதிகாரிகளும் ஆக்கப்பூர்வமாக உதவித் தொகையை வழங்கினர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியிலான பல சீனர் சமூக நிறுவனங்கள், உள்ளூர் நேரப்படி, 12ம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தின. செய்தி ஊடகங்கள் மூலம், சீனர் குடியிருப்பிடங்களில் நிலநடுக்க பிரதேசங்களின் புதிய நிலைமையை இச்செய்தியாளர் கூட்டம் அறிமுகப்படுத்தியது. பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்காக, நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலான சீனர் சமூக நிறுவனங்களின் பொது சம்மேளனம், 12ம் நாள் இரவு அவசர கூட்டம் நடத்தி, நன்கொடை வழங்குமாறு அணி திரட்டியது.

sichuan மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்குமாறு அனைத்து வெளிநாடுகளிலும் வாழ் மக்களுக்கும் நேற்று பிரிட்டனிலான சீன இளைஞர் சம்மேளனமும், சீனர் சிறப்புத் துறை சங்கமும்,வேண்டுகோள் விடுத்தன.