சில நாடுகளின் அரசுகளும், அரசுத் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும், அடுத்தடுத்து சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவுக்கும், தலைமையமைச்சர் வென்சியாபாவுக்கும், ஆறுதல் தெரிவித்தனர், அல்லது அறிக்கை வெளியிட்டனர். sichuan மாநிலத்தின் wenchuan மாவட்டத்திலான கடும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். பேரிடர் நீக்கப் பணியில் சீன அரசு மற்றும் மக்களின் கடினமான முயற்சிக்கு அவர்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன அரசு மற்றும் மக்களுக்கும், கொரிய தொழிலாளர் கட்சி, வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா அரசவை, லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள், ஆழ்ந்த அனுதாபத்தையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்தனர்.
ரஷிய அரசுத் தலைவர் medvedev, sichuanஇல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். சீனாவின் பேரிடர் நீக்கப் பணிக்கு தேவையான உதவியளிக்க ரஷியா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
சீன sichuanயில் நிகழ்ந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது. சீன மக்களுக்கு அனுதாபத்தை தெரிவித்து, பேரிடர் நீக்கப் பணிக்காக தம்மால் இயன்ற உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்க அரசுத் தலைவர் புஷ், சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவுடன் தொலைபேசியில் பேசிய போது இவ்வாறு கூறினார்.
உயிரிழந்தோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பரோசோ ஆறுதலை தெரிவித்தார். சீனாவின் மீட்புப் பணியை ஐரோப்பிய ஒன்றியம் முழு மூச்சுடன் ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
|