• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 19:34:53    
துப்புரவு தொழிலாளி Xu Hui

cri
நாள்தோறும் விடியற்காலை நான்கு மணியளவில், பெரும்பாலோர் தூக்கத்தில் மூழ்கியிருக்கும் போது, Xu Hui என்ற துப்புரவு தொழிலாளி சுறுசுறுப்பாக துப்புரவு பணி செய்கின்றார். அவரது ஊர், An Hui மாநிலத்தின் Wu Hu நகரம் ஆகும். தற்போது, கிழக்கு சீனாவின் Zhe Jiang மாநிலத்தின் Ning Bo நகரில் துப்புரவு தொழிலாளராக பணி புரிகின்றார்.

அவருக்கு வயது 41. ஏழு ஆண்டுகளுக்கு முன், அவர் Ning Bo நகருக்கு வந்தார். அவர் கூறியதாவது:

"எனது மனைவி Ning Bo நகருக்கு முன்னதாக வந்துள்ளார். துப்புரவு பணி அசுத்தமானது. களைப்படையச்செய்யக்கூடியது. ஆனால் இந்த பணியில் ஈடுபட்டால், சம்பளத்தில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. எனவே Ning Bo நகருக்கு வந்து துப்புரவு தொழிலாளராக மாறுவதென முடிவு செய்தேன்" என்றார், அவர்.

Xu Hui பொறுப்பேற்கும் வீதியில் கடைகள் அதிகமாக காணப்படுகின்றன. ஒரு சிறு காய்கறி சந்தையும் இருக்கின்றது. அவருடைய துப்புரவு பணியில் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. நாள்தோறும் விடியற்காலை, தாம் பொறுப்பேற்கும் வீதியை முழுமையாக துப்புரவு செய்த பின், மீண்டும் மிக வேகமாக வீதியைச் சுத்தப்படுத்துகின்றார். சில சமயங்களில், சுமார் 700 மீட்டர் நீளமுடைய வீதியைத் துப்புரவு செய்வதற்கு, 12 நிமிடங்கள் மட்டும் தேவைப்படுகின்றன. அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளம்பரம் செய்யும் தொண்டராகவும் அவர் சேவை புரிகின்றார். அருகில் உள்ள குப்பைத் தொட்டி எங்கே இருக்கின்றது என்பதை குப்பை கூளங்களை வீதியில் வீசிய மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்கின்றார். சில்லறை வியாபாரிகள் கண்ட இடங்களில் குப்பைக் கூளங்களை வீச வேண்டாம் என்று அவர் பொறுமையுடன் வற்புறுத்துகிறார். தவிர, கடைகளின் வாயில்களில் தற்காலிக குப்பைத் தொட்டிகளை அவர் வைத்துள்ளார்.

Xu Huiவின் அறிவுரையின் காரணமாக, படிப்படியாக பெரும்பாலான வியாபாரிகள் தங்களது நாகரிகமற்ற செயல்பாடுகளை குறைத்துள்ளனர். அவர் பொறுப்பேற்கும் வீதி, உள்ளூர் பிரதேசத்தில் சோதனை விலக்கு வீதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Xu Hui, மேலதிக Ning Bo நகரவாசிகளால் அறிந்து கொள்ளப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு, "வெளியூரிலிருந்து Ning Bo நகருக்கு வந்து வேலை செய்யும் நட்சத்திர நாயகனாக" அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Xu Hui சுறுசுறுப்பாக பணி புரியும் எழுச்சி இதற்கு காரணமாகும் என்று அவரை பரிந்துரை செய்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகத்தின் பொறுப்பாளர் Zhang Ju Fei அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது:

"அவர் சுறுசுறுப்பாக பணி புரிக்கின்றார். தன்னுடைய நலனைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றார்" என்றார், அவர்.

அவரது சக பணியாளர்கள் அவரை பாராட்டுகின்றனர். Li என்னும் சக பணியாளர் கூறியதாவது:

"இதே ஊரில் நாம் பிறந்து வளர்ந்தோம். ஆனால் அவர் உணர்வுபூர்வமாக பொறுப்புடன் பணி புரிக்கின்றார். சாதாரண நாட்களில், அவர் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றார்"என்றார், அவர்.

Xu Huiவின் பணியில், சிறப்பு அனுபவ நிகழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. தமக்கும் 70 வயதான மூதாட்டி Tu Chuan Xinக்குமிடை கதை அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"2003ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் வீதியில் துப்புரவு செய்துக் கொண்டிருந்தேன். அவர் திடீரென என்னிடம் வந்து, 'நீங்கள் என்னுடைய பால் வாங்கும் அட்டையை பார்த்தீர்களா?' என்று கேட்டார். தெரியாது என்றவுடன் அவர் கவலை அடைந்தார். அவருக்கு துணை புரியும் பொருட்டு, நான் அந்த அட்டையை தேடினேன். அப்போது குப்பை கூளங்களை ஏற்றிச்செல்லும் வண்டி குப்பையால் நிரம்பியிருந்தது. குப்பை கூளங்கள் எல்லாவற்றையும் தரையில் தட்டினேன். இறுதியாக அந்த அட்டையை கண்டுபிடித்தேன். நான்கு வகை அட்டைகள் அதிலிருந்தன. அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர், நன்றி தெரிவிக்கும் கடிதத்தை எனக்கு அனுப்பினார்." என்றார், அவர்.

அதன் பிறகு, அவர்கள் நண்பர்களாக பழகி வருகின்றனர். செய்தித்தாட்களில் Xu Hui பற்றிய செய்திகளை மூதாட்டி Tu Chuan Xin திரட்டி வருகின்றார்.

Xu Hui பற்றிய நல்ல செய்திகள் அதிகம். 2007ஆம் ஆண்டு மே திங்கள், Ning Bo நகரின் துப்புரவு தொழிலாளி மாதிரியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு திங்களுக்கு பின், அவர் Zhe Jiang மாநிலத்தின் 10 மாதிரி பணியாளர்களில் ஒருவர் என்ற மதிப்பு பெற்றார். அண்மையில், அவர் ஒலிம்பிக் தீபம் ஏந்துபவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள், குடியிருப்பு பதிவுக்குறிப்பு அமைப்பு முறையைச் சீர்படுத்தியுள்ளன. இது திறமைசாலிகளின் புழக்கத்துக்கு வசதி தந்துள்ளது. அண்மையில் Ning Bo நகராட்சி அரசு, வெளியூரிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு சமூக காப்பீடு வழங்கப்படும் விதியை வெளியிட்டது. அவ்விதியின் படி, Ning Bo நகருக்கு வந்த வெளியூர் தொழிலாளர்கள், உள்ளூர் மக்களை போல் 5 வகை காப்பீடுகளை அனுபவிக்க முடியும். வெளியூரிலிருந்து இந்த நகருக்கு வந்த 28 இலட்சத்து 50 ஆயிரம் பேர், சமூக காப்பீட்டு அமைப்பு முறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக Xu Hui செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது:

"Ning Bo நகருக்கு வந்த துவக்கத்தில், பணி நிதானமாக உள்ளது என்றும், வெளியூரிலிருந்து இந்நகருக்கு வந்த தொழிலாளர்கள் மீது அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் உணர்ந்து கொண்டேன். தாம் விருதுகளைப் பெற முடியும் என்று கற்பனை கூட செய்யவில்லை. குடியிருப்பு பதிவுக் குறிப்பைப் பெறுவதை கனவு போல் உணர்ந்து மகிழ்ச்சி கொள்கின்றேன்" என்றார், அவர்.