• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 08:53:51    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தோடரோட்டம்

cri
2008ம் ஆண்டு மே 8ம் நாள் முற்பகல், உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் கலந்துகொண்ட சீன மலையேற்ற அணியின் வீரர்கள், உலகத்திடம் "பெய்சிங்கிற்கு வருகை தர உங்களுக்கு நல் வரவேற்பு" என்ற அழைப்பு விடுத்தனர். ஒற்றுமை மற்றும் போராட்ட எழுச்சியை அடையாளப்படுத்தும் ஒலிம்பிக் புனிதத் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் எரிந்தது. சீன

மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதிலான நம்பிக்கையை இது கோடிட்டுக்காட்டியுள்ளது. அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நோக்கத்தையும் ஒலிம்பிக் எழுச்சியையும் இது எடுத்துக்காட்டியுள்ளது.
2001ம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக விண்ணப்பித்த போது, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடைபெறும் என்று சீனா வாக்குறுதி அளித்தது. மிகவும் உயரமான இடம் மற்றும் மிகக் குறைவான அழுத்தம் கொண்ட காலநிலை உள்ளிட்ட மிக மோசமான

வானிலை மற்றும் சிக்கல் வாய்ந்த நிலைமையில் ஒலிம்பிக் தீபம் எரியூட்டப்படுவதை நனவாக்கி, ஒப்படைப்பது என்பது மாபெரும் அறை கூவலாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவின் அறிவியலாளர்கள், மலையேறுனர்கள், வானிலை வாரியங்கள், பின்னணிச் சேவை பாதுகாப்பு வாரியங்கள் ஆகியோர் பன்முக ஒத்துழைப்பை மேற்கொண்டு, பல இன்னல்களைச் சமாளித்து, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் தீபத் தொடரோட்டத்தை இறுதியில் நனவாக்கியுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான வாக்குறுதியை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முக்கிய அன்பனிப்பு ஒன்றை சீனா வழங்கியது. ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் நடத்த தீபத் தொடரோட்ட நடவடிக்கையே அதுவாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான இதர வாக்குறுதிகளையும் சீனா நிறைவேற்றும் வேண்டும். தற்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் தடையின்றி நிறைவேற்றுப்பட்டுள்ளன. தூய்மை கேடற்ற, அறிவியல் தொழில் நுட்ப மற்றும் மானுடவியல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பெய்சிங்கில் நடத்தப்படும்.
உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியிலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கையை சீனா வெற்றிகரமாக நனவாக்கியது. ஆனால், இந்த

பெரும் ஒலிம்பிக் விளையாட்டுக்குரியது. மேலும் விரைவாக, உயர்வாக மற்றும் வன்மையாக என்பது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் இலக்காகும். ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை ஒலிம்பிக் தீபம் வெற்றிகரமாக அடைந்தமை, இவ்விலக்கை உயிர்த்துடிப்புடன் உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டியது.
மே 8ம் நாள், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை என்ற தனது வாக்குறுதியை சீனா நிறைவேற்றியது. ஆகஸ்டு 8ம் நாள், வாக்குறுதியின் படி, உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த சீனா பாடுபடும் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.