• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 08:55:20    
தொலைந்துபோன குதிரை

cri

ஷாங்தாங்கை சொந்த ஊராக கொண்டவன் பாவ் ஷுவன். அவன் நகர பாதுகாவலனாக இருந்தான். மக்கள் தலைவனாக, மக்களை துன்பம் ஏற்படாமல் காப்பவனாக இருப்பதே பாதுகாவலனின் கடமையாகும்.
இளைஞனான பாவ் ஷுவன் ஒருநாள் தேர்வு ஒன்றுக்காக தலைநகரம் நோக்கி சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் பயணமான அறிஞர் ஒருவர் நெஞ்சு வலியால் துன்புறுவதை கவனித்தான். உடனே தனது வண்டியிலிருந்து இறங்கி உதவ ஓடினான் பாவ் ஷுவன். ஆனால் அவன் அருகே சென்று அந்த அறிஞருடைய பெயரைக்கூட கேட்பதற்கு முன் அவர் நெஞ்சுவலி தாங்காமல் உயிரிழந்தார்.
அவரிடம் 10 வெள்ளிக் காசுகளும், ஒரு ஓலையும் இருந்தன.


பாவ் ஷுவன் அறிஞரை அடக்கம் செய்ய ஒரு வெள்ளிக்காசை செலவழித்த பாவ் ஷுவன் மீதியை அந்த அறிஞருடைய தலைக்கு கீழும் அவர் வைத்திருந்த ஓலையை அவரது உடல் மீதும்
வைத்து அடக்கம் செய்தான். புறப்பட எத்தனித்தபோது, அறிஞர் அடக்கம் செய்த இடத்தின் அருகே நின்றபடி "இறந்த பின் உமது ஆன்மா விழித்திருந்தால், நீர் எங்கே இருக்கிறீர் என்பதை உமது குடும்பத்தினர் அறிவதாக. எனக்கு வேலை இருப்பதால் இங்கே உம்மோடு இன்னும் நீண்ட நேரம் தங்க இயலாது" என்று கூறி தலைநகர் நோக்கி கிளம்பினான் பாவ் ஷுவன்.


தலைநகரை அடந்தபோது ஒரு அழகான, வலிமையும் பொலிவும் கொண்ட குதிரை அவனோடு அவனது வண்டியோடு சேர்ந்துகொண்டது. பாவ் ஷுவனை தவிர வேறு எவரையும் தன் அருகில் நெருங்க விடவில்லை இந்த குதிரை. சென்ற வேலை முடிந்து ஊர் திரும்புகையில் தாம் வேறு எங்கோ போய் கொண்டிருப்பதை கவனித்தான் பாவ் ஷுன். வழி தவறிவிட்டது என்பதை உணர்ந்த பாவ் ஷுன் சற்று தொலைவில் ஒரு பெரிய வீடு இருப்பதை கவனித்தான். ஏதோ ஒரு பெருஞ்செல்வந்தனுடைய வீடு என்பதால் தனக்கு இரவு தங்க அனுமதி கிடைக்கும் என்று நம்பி அந்த வீட்டை அடைந்து வீட்டின் முதலாளியை காண விரும்புவதாக பணியாளனிடம் கூறி தனது பெயர் அட்டையை கொடுத்தனுப்பினான் பாவ் ஷுன். பாவ் ஷுன்னின் வண்டியையும், அங்கே அந்த அழகான குதிரையையும் கண்ட பணியாளன் சடுதியில் வீட்டுக்குள் ஓடிச்சென்று தனது முதலாளியிடம், "ஐயா வெளியே யாரோ ஒருவன் நிற்கிறான், அவன்தான் நீங்கள் இழந்த உங்களது குதிரையை திருடியவன்" என்று கூறினான். உடனே முதலாளி, பாவ் ஷுன் ஷாங்தாங்கை சேர்ந்த பெயர் பெற்ற கல்விமான். குதிரை அவரிடம் இருக்க ஏதாவது காரணம் இருக்கும் என்று கூறியபடி, வெளியே சென்று பாவ் ஷுன்னை சந்தித்து, தான் கடந்த ஆண்டு தொலைத்த அந்த குதிரை அவனிடம் வந்ததெப்படி என்று வினவினான்.


உடனே பாவ் தான் தலைநகருக்கு புறப்பட்டு வருகையில் பார்த்த அறிஞர் பற்றியும், அவர் இறந்தது பற்றியும், அதன் பின் இந்த குதிரை தன்னிடம் வந்து சேர்ந்தது பற்றியும் கூறினான். இதைக் கேட்ட அந்த செல்வந்தன் வாயடைத்து நின்றான்.
கண்ணீர் மல்கியபடி, பாவ் ஷுன் வழியில் பார்த்த அந்த் அறிஞர் தனது மகனே என்று கூறினான் அந்த செல்வந்தன். பின் பாவ் ஷுன் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று அடக்கம் செய்யப்பட்ட தனது மகனின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை கொண்டுவந்து அதில் ஒரு ஓலையும், 9 வெள்ளிக்காசுகளும் இருந்ததை கண்டான். இதற்கு பின் பாவ் ஷுன்னின் நன்னடத்தை பற்றி இந்த செல்வந்தன் அரசவையில் பெருமையாக கூறி அவனை பெரிய பதவிக்கு முன்மொழிந்தான். பின்னாளில் பாவ்ஷுன்னின் நற்பெயர் பரவத்தொடங்கி அவன் மிகப்புகழ்பெற்றவனான்.