• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 18:59:21    
பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மீட்புதவி நடவடிக்கைகள்

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று வரை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனா, அனைத்து மூலவளத்தையும் ஆற்றலையும் அணித்திரட்டி, பெருமளவிலான மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீட்புதவி படைகள், கடுமையான இன்னல்களைச் சமாளித்து, பாதிக்கப்பட்ட மையப் பகுதியில் நுழைந்துள்ளன.

இந்நில நடுக்கத்தின் மையப்பகுதியிலுள்ள வென் சுவான் மாவட்டம், சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் செங்து நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு கொண்ட போதிலும், நிலநடுக்கத்தால் மலையில் ஏற்பட்ட மண் சரிவினால், வென்சுவானுக்கு செல்லும் பாதை, முழுவதுமாக தூண்டிக்கப்பட்டது. மேசமான காலநிலை, தொடர்ச்சியான நில நடுக்கம் ஆகியவை, மீட்புதவிப்பணிக்கு மாபெரும் இன்னல்களை உருவாக்கியுள்ளன.

வென் சுவான்னின் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து மீட்புதவியாளர்கள் நடந்து சென்று, வென் சுவானை அடைந்தனர். நேற்று நண்பகல், முதலாவது தொகுதி படைவீரர்கள், வென்சுவான் மாவட்டத்தைச் சேர்ந்த யீங் சியு வட்டத்தில் நுழைந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றினர். பிறகு, 800க்கு அதிகமான ஆயுத காவற்துறையினர்கள் அடுத்தடுத்து வென்சுவான் மாவட்டத்தைச் சென்றடைந்து, மீட்புதவி கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள செய்திகளின் படி, வென்சுவான் மாவட்டத்தில், மிக அதிகமாக வீடிழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அருகிலான லூங்சி மற்றும் யீங் சியு வட்டங்களில் நிலைமை மேலும் மோசமாக இருக்கிறது. மேலும் அதிகமான சீனப்படைவீரர்கள், முழுமூச்சுடன் வென்சுவானுக்குச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

வென்சுவானுக்குச் செல்லும் பாதைகளை வெகுவிரைவில் திறக்குமாறு, தொடர்புடைய வாரியங்களை, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கோரினார். அவர் கூறியதாவது:

இம்முறையான நில நடுக்கம், மிக கடுமையாக நிகழ்ந்துள்ளது. வென்சுவான் மாவட்டம், அதன் மையப்பகுதியாகும். தற்போது, பாதைகளைத் திறந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற, விடுதலைப் படைவீரர்கள் பாடுபடுகின்றனர் என்றார் அவர்.

சீன ராணுவ தரப்பின் படைக்குழு முன்னெச்சரிக்கை அலுவலகத்தில் பேட்டி கண்ட சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் லீ யுன் பேசுகையில், தற்போது, பெருமளவான சீனப் படைவீரர்கள், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர் என்று கூறினார்.

புள்ளிவிபரங்களின் படி, 16 ஆயிரத்துக்கு கூடுதலான படைவீரர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்றடைந்துள்ளனர். சுமார் 34 ஆயிரம் படைவீரர்கள், சென்றுக் கொண்டிருக்கின்றனர். காலதாமதமின்றி அடையும் வகையில், ராணுவ தரப்பு, 11 ராணுவ விமானங்களையும் 9 பயணியர் விமானங்களையும் பயன்படுத்தி, முழு மூச்சுடன் மீட்புதவியாளர்களை அனுப்பியது என்றார் லீ யுன்.

வீடுகளின் கட்டமைப்பு வேறுபட்டதாக இருப்பதால், உயிர்த் தப்பி பிழைப்போர் உயிர் வாழும் நேரம் ஒப்பீட்டளவில் நீளமாக இருக்க கூடும். மீட்புதவிப் பணி, விரைவாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று சீனப் பொது துறை அமைச்சகத்தின் மீட்புதவி பிரிவின் தலைவர் வாங் சென் யாவ் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

மனிதரைக் காப்பாற்றுவது உடனடி கடமையாகும். வாய்ப்பு இருந்தால், அரசு, மீட்புதவி தடையில்லாமல் நடைமுறைப்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்யும் என்றார் அவர்.

சீன சுகாதார வாரியங்கள் அனுப்பிய மருத்துவ சிகிச்சை மீட்புதவிக் குழுக்கள், பல்வேறு இடங்களிலிருந்து, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவானுக்குச் சென்றன. மீட்புதவிப் பொருட்கள் இடைவிடாமல் ஏற்றிச்செல்லப்பட்டு வருகின்றன. சீனப் பொது துறை துணை அமைச்சர் லோ பிங்பெஃ கூறியதாவது:

சீன நடுவண் அரசு, 86 கோடி யுவான் அவசர மீட்புதவி நிதித்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இது, பேரிடர் நீக்க மீட்புதவி, பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக குடியமர்த்தும் பணி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.