இன்று தென் கொரிய மற்றும் சிங்கப்பூரின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில், சீன அரசின் பேரிடர் நீக்கப் பணிக்கு பாராட்டு தெரிவித்தன. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் நேற்று அடுத்தடுத்து கட்டுரைகளை வெளியிட்டு, சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநில வென்சுவான் மாவட்டத்தின் நிலைமையில் கவனம் செலுத்தியதோடு, சீன அரசின் பேரிடர் நீக்கப் பணியை வெகுவாக பாராட்டின.
Yonhap செய்தி நிறுவனமான தென் கொரிய செய்தி ஊடகம் வெளியிட்ட கட்டுரையில், கடுமையான சீற்றம் ஏற்பட்ட போது, சீன அரசின் நடவடிக்கை விரைவானது என்று கூறியது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவின் பயணத்தில் இக்கட்டுரை சிறப்பு கவனம் செலுத்தியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இயன்ற உதவியை வழங்குமாறு தென் கொரியவின் பல்வேறு வட்டாரங்களுக்கு அதன் செய்தி ஊடகங்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளன.
Lianhe zaobao என்ற சிங்கபூரின் நாளேடு வெளியிட்ட கட்டுரையில், சீன அரசு பேரிடர் நீக்கப்பணியை விரைவாக மேற்கொள்வதோடு சீனாவின் செய்திஊடகங்கள் இச்சீற்றத்தின் நிலைமையை காலதாமதமின்றி அறிவிக்கின்றன. இது, மக்கள் மத்தியில நம்பிக்கையை வளர்க்க பெரும் பங்காற்றியது என்று குறிப்பிட்டுள்ளது.
|