சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின், வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நிவாரணப் பணிக்காக ஆக்கப்பூர்வமாக நன்கொடை வழங்குகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மக்களுக்கு தனது உதவியை விரைவாக அளிக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
தாய்நாட்டிற்கு உதவி தேவைப்படும் போது, சிற்பபு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மக்களுக்கு உதவி அளிக்குமாறு, உலகில் அனைத்து சீனர்களுக்கும், உலக சீனர் கூட்டு சம்மேளனம் இன்று வேண்டுகோள் விடுத்தது.
தவிரவும், இன்று, ஸ்பெயின், கியூபா, மெக்சிகோ, பிரான்ஸ், தாய்லாந்து, செக், Botswana, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சீன தூதரகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நன்கொடை வழங்கின.
|