சில நாடுகளின் அரசுகளும், அரசுத் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும், அடுத்தடுத்து சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவுக்கும், தலைமையமைச்சர் வென்சியாபாவுக்கும், sichuan மாநிலத்தின் wenchuan மாவட்டத்திலான கடும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்து, ஆறுதல் தெரிவித்தனர். பேரிடர் நீக்கப் பணியில் சீன அரசு மற்றும் மக்களின் கடினமான முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ரஷிய அரசுத் தலைவர் medvedevஉம், அமெரிக்க அரசுத் தலைவர் புஷும், தனித்தனியே ஹூசிந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். நிலநடுக்கம் பற்றி கவனத்தைத் தெரிவித்து, பேரிடர் நீக்கப் பணிக்காக தம்மால் இயன்ற உதவிகள் அனைத்தையும் மேற்கொள்ள விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜெர்மன் தலைமையமைச்சர் மெர்க்கல் அம்மையார், வென்சியாபாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இப்பேரிடரின் போது ஜெர்மனி உதவி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, வடகொரியா, தென் ஆப்பிரிக்கா, கென்யா, செற்பியா, நியூசிலாந்து, ஈரான், இஸ்ரேல், கனடா முதலிய நாடுகளின் தலைவர்களும், ஸ்லோவேனியா, ஸ்பெயின், கொலம்பியா முதலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும், சீன நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தனர். சீன அரசு மற்றும் மக்களின் பேரிடர் நீக்கப் பணிக்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
தவிர, ஐ.நாவின் தலைமை செயலாள் பான் கி மூன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பரோசோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் Rogge முதலியோர், சீனஅரசின் விரைவான, பயனுள்ள மீட்புப் பணியைப் பாராட்டி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தனர்.
|