14ம் நாள் பிற்பகல் 4மணிக்கு, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் அனைத்து உயர் வேக நெடுஞ்சாலைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
சீன போக்குவரத்து அமைச்சகத்தின் துணை அமைச்சர் Feng Zhenlin இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை அறிவித்தார்.
தற்போது, இந்நிரநடுக்கத்தின் மையமான வென்ச்சுவான் மாவட்டத்தை முக்கியமாக கொண்ட பாதைகளுக்கான செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 4 திசைகளிலிருந்து இம்மாவட்டத்துக்குச் செல்லும் பாதைகளை விரைவாக செப்பனிட்டு திறக்க பாடுபடுவதாக அவர் கூறினார்.
|