14ம் நாள் பிற்பகல் 4மணி வரை, 8000 கூடாரங்கள் 50ஆயிரம் போர்வைகள் ஆடங்கிய மீட்புதவி பொருட்கள், சிச்சுவான் மாநிலத்தில் நிருநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தன.
இன்று, செய்தியாளரிடம் பேசுகையில், சீனப் பொது துறை அமைச்சகத்தைச் சேர்ந்த பேரிடர் நீக்க துறையின் பொறுப்பாளர் Zhang Xiaoning இதை அறிவித்தார். இதர மீட்புதவி பொருட்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சென்றடையும் என்று அவர் கூறினார்.
திட்டப்படி, 14ம் நாள் இரவு 12மணிக்குள், 25 ஆயிரத்து 650 கூடாரங்கள் சந்து நகருக்கு ஏற்றுசெல்லப்படவுள்ளன என்றார் Zhang Xiaoning.
14ம் நாள் பிற்பகல் 6மணி வரை, ஏறக்குறைய 1இலட்சத்து 20ஆயிரம் கூடாரங்கள், 2இலட்சத்து 20ஆயிரம் போர்வைகள், 1இலட்சத்து 70ஆயிரம் பஞ்சாடைகள் உள்ளிட்ட மீட்புதவி பொருட்கள், சிச்சுவான், கான் சு, சன்சி ஆகிய பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன.
|