சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், 14ம் நாள் காலை, நிலநடுக்கத்தால் மிக பாதிக்கப்பட்ட பிரதேசமான பேய் ச்சுவான் மாவட்டத்தை சென்றடைந்து, பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்கினார்.
தற்போது, மீட்பு பணி குழுவின் உறுப்பினரின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது. இவ்வுறுப்பினர்கள், பொது மக்களை இன்னலிருந்து மீட்க பாடுபட்டு வருகின்றனர். பொது மக்களின் மீட்பு, மிக முக்கியமானது என்று பேய் ச்சுவான் இடை நிலை பள்ளியில் வென் ச்சியா பாவ் கூறினார்.
நிலநடுக்கம், மலையை அசைக்கலாம், ஆற்றை தடை செய்யலாம். ஆனால், அது, மக்களின் மன உறுதியை அசைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். ஒன்று பற்றியிருந்து, பரஸ்பர உதவி அளித்ததால் மட்டுமே, இப்பேரழிவை தோற்கடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
|