• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 09:02:33    
சர்வதேசச் சமூகத்தின் ஆறுதல்

cri
நேற்று, சில வெளிநாடுகளின் அரசுகள், அரசுத் தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் மற்றும் தலைமையமைச்சர் வென் சியாபாவுடன் தொலைபேசி உள்ளிட்ட பல வழிமுறைகளில் தொடர்பு கொண்டு, சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்தனர். நிலநடுக்கத்திலான பேரிடரைச் சமாளிப்பது பற்றிய சீன அரசின் முயற்சியை அவர்கள் ஆதரித்தனர். சீன அரசு மற்றும் மக்கள், இந்த பேரிடரை தோற்கடிப்பது உறுதி என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் உயிரிழப்பு பற்றி, சிங்கப்பூர் அரசுத் தலைவர் s.r.nathan மனக் கசப்பு அடைந்தார். சீன அரசு விரைவாகவும், தங்கு தடையின்றியும் நடவடிக்கை மேற்கொள்வதை அவர் பாராட்டினார். இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை சமாளித்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷாரப் பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்று, ஆழந்த ஆறுதலைத் தெரிவித்தார். சீனச் சகோதரர்களின் துயரை எண்ணி பாகிஸ்தான் மக்கள் மன வருத்தும் அடைந்தனர். சீனா வெகுவிரைவில் இவ்வியற்கைச் சீற்றத்தைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். சீனாவிலுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மருந்துப் பொருட்கள், கம்பளங்கள் முதலிய மீட்புதவிப் பொருட்களை பாகிஸ்தான் வழங்கும் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானி தெரிவித்தார்.

சீன அரசின் உறுதியான தலைமை, சீன மக்களின் திடமான மன உறுதி, அனைத்து மீட்புதவிப் பணியாளர்களின் சளையாத முயற்சி ஆகியவற்றால், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று எகிப்து அரசுத் தலைவர் முபாரக் மற்றும் வெளியுறவு அமைச்சர் கெய்த் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியச் செயற்குழுவின் தலைமைச் செயலாளரும், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் உயர் பிரதிநிதியுமான Javier Solana, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தின் தலைவர் Hans-Gert Pottering, சீன அரசு மற்றும் பலியானவரின் குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர். மீட்புதவியை வழங்கி, இடபாடுகளில் சிக்கியுள்ளோர் விரைவில் காப்பாற்ற பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

தவிர, பூட்டான், மங்கோலியா, லிதுவேனியா, கிரோவேஷியா, ஹங்கேரி, பிராசவில் காங்கோ முதலிய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் சீனாவுக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.