• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 11:32:44    
ச்சியாங் சியின் சிங்காங்ஷான் சென்றடைந்த ஒலிம்பிக் தீபம்

cri
இன்று காலை 8:08 மணிக்கு, ச்சியாங் சி மாநிலத்தின் சிங்காங்ஷான், ஒலிம்பிக் நகரில் தீபத் தொடரோட்டம் துவங்கியது.

தற்போது, சி ச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலான மீட்புதவிப் பணியில் சீனா முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சி ஆன் நகரின் மக்கள் மீட்புதவிப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு, பேரிடர் நீக்க பணிக்கு தம்மால் இயன்ற அளவில் பங்காற்றுவர் என்று சிங்காங்ஷானின் சி ஆன் நகர் கட்சிக் கமிட்டியின் செயலாளர் Zhou Meng துவக்க விழாவில் கூறினார்.

இந்நகரிலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், 15 கிலோ மீட்டராகும். 208 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

80க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், இங்கு முதலாவது கிராமப்புறப் புரட்சித் தளத்தைக் கட்டியமைத்தனர். இது, சீனப் புரட்சியின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.