தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், நிலநடுக்க மையப்பகுதியான வென் ச்சுவான் மாவட்டத்துக்குச் செல்லும் பாதையைப் பழுது பார்க்கும் பணியில், முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி கூறியது.
போக்குவரத்து வாரியங்கள், வென் ச்சுவானுக்குச் செல்லும் பாதையை 4 திசைகளிலிருந்தும் திறந்து கொண்டிருக்கின்றன. இன்று விடியற்காலை வரை, மிக விரைவாக முன்னேறிய ஒரு பாதை, வென் ச்சுவானிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, பழுது பார்க்கும் பணி, தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சகம் கூறியது.
|