• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 15:42:58    
கடுமையான நிலநடுக்கம்

cri

மே திங்கள் 12ம் நாள், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்று தொடர்புடைய வாரியம் கூறியுள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணி வரை, மொத்தம் 14 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். சிச்சுவான் மாநிலத்தில் மட்டும் 14 ஆயிரத்து 463 பேர் உயிரிழந்தனர்.சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், நேற்றிரவு, அரசவையின், நிலநடுக்கப் பேரிடர் நீக்கப்பணி தலைமையகத்தின் கூட்டம் நடத்தினார். இதில், மனிதரைக் காப்பாற்றுவது இப்போதைய மீட்புதவிப் பணியில் மிக முக்கியமான கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

வென்சியாபாவ், தொடர் வண்டி மூலம், இன்று காலையில், சி ச்சுவான் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள guang yuan நகர் சென்றடைந்து, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட qing chuan மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டார்.

இன்று காலை 8:00 மணி வரை, மீட்புதவிப் பணியார்கள் மற்றும் ஆயுத காவற்துறையைச் சேர்ந்த படைவீரர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. மீட்புதவி அணிகள் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் நுழைந்துள்ளன.

இன்று காலை வரை, மீட்புதவிப் பணியாளர்களால் 60 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் காலதாமதமற்ற சிகிச்சையையும் உரிய ஏற்பாடுகளையும் பெற்றுள்ளனர்.

சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் நிகழ்ந்த பின், நடுவண் அரசின் நிதித் துறை, பேரிடர் நீக்கப்பணிக்கு 111 கோடி யுவான் நிதியைப் ஒதுக்கிவைத்துள்ளது. நேற்று பிற்பகல் 4 மணி வரை, சமூகத்தின் பல்வேறு துறைகள் 87 கோடியே 70இலட்சம் யுவானுக்கு மேற்பட்ட தொகை நன்கொன்ட செய்துள்ளது.சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலான பேரிடர் நீக்கப் பணிக்கு உதவி அளிக்கும் சிறப்பு மீட்புதவிப் பணியாளர்களை ஜப்பானிய அரசு அனுப்புவதற்கு, சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Qingang இன்று கூறினார்.