சீன sichuanஇல் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீனாவின் பேரிடர் நீக்கப் பணிக்கு நிதி அல்லது மனிதநேய உதவியை சர்வதேச சமூகம் நேற்று தொடர்ந்து, வழங்குகின்றது.
30 டன் மனிதநேய உதவி பொருட்களை ஏற்றிய விமானம், நேற்று மாலை chengdu சென்றடைந்து, கூடாரங்கள்,போர்வைகள் முதலியவற்றை கொண்டு வந்துள்ளது. நேற்று ரஷியாவிலிருந்து இன்னொரு விமானம் புறப்பட்டு சீனாவுக்கு 2வது உதவி பொருட்களைக் கொண்டு வந்தது. இன்றும், நாளையும், இன்னும் மனிதநேய உதவி பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் சீனாவுக்கு வரும்.
பிரிட்டன் அரசு, 10 இலட்சம் பவுண் மதிப்புள்ள மீட்பு உதவி பொருட்களை பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு தானம் செய்யும் என்று பிரிட்டன் சர்வதேச அமைச்சகத்தின் சீனாவிலுள்ள அலுவலகம் நேற்று தெரிவித்தது.
நாளை பிரான்ஸ் ஒரு பெரிய விமானத்தை அனுப்பி, கூடாரங்கள், போர்வைகள், மருந்துகள் முதலியவற்றை ஏற்றி, சீன செஞ்சிலுவை சங்கத்துக்கு ஒப்படைக்கும். இந்த உதவி பொருட்கள் சுமார் 2 இலட்சத்து50 ஆயிரம் யூரோ மதிப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையை இவ்வாறு கூறியது.
|