கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
தமிழன்பன்........அன்பான நேயர்களே. நலமா. இன்றைய நிகழ்ச்சியில் பேளுக்குறிச்சி கே. செந்தில் சீனாவில் தொலைதொடர்பு துறையின் வளர்ச்சி பற்றி வினா எழுப்பியுள்ளார்.
கலை.........ஆமாம். சீன நாட்டில் தகவல் துறை விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று சீனாவின் தகவல் துறை பற்றி உரையாடலாம்.
தமிழன்பன்........தகவல் தொழில் துறை வளர்ச்சி பற்றி பொதுவாக கூறுவதை விட குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தகவல் துறையின் வளர்ச்சி பற்றி விளக்கலாமே. அதன் மூலம் சீனாவில் தகவல் துறையின் வளர்ச்சியை ஓரளவில் உணரச் செய்ய முடியும்.
கலை.........நல்ல ஆலோசனை. இதை தான் நூனும் என்ணினேன்.
தமிழன்பன்........அப்படியிருந்தால் சீனாவில் நடுத்தர அளவிலான வளர்சசியிலுள்ள மாநிலத்தை தெரிவு செய்து அதை எடுத்துக்காட்டாக வைத்து விவரிக்கலாமே.
கலை........மகிழ்ச்சி. சீனாவில் மொத்தம் 34 தன்னாட்சி பிரதேசங்கள், மாநகரங்கள் மற்றும் மாநிலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சான்துங் மாநிலம் நடு தர வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் தகவல் துறையின் வளர்ச்சியை விளக்கிய பின் சீனாவில் தகவல் துறையின் வளர்ச்சி அறிந்து கொள்ளலாம் என்று நம்புகின்றேன்.
தமிழன்பன்........சான்துங் மாநிலத்தின் தகவல் துறையில் சான்துங் இணையத் தளம் கடந்த சில ஆண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்த புதிய தகவல் சேவை தளமாக கருதப்படுகின்றது.
கலை.........ஆமாம். கிராமப்புறங்களுக்கு சேவை புரியும் முக்கிய இணைய தளமாகிய சான்துங் இணைய தளம் கடந்த 3 ஆண்டுகளில் சந்தை போட்டியில் தனிச்சிறப்பியல்பு மிக்க இணைய தளமாகியுள்ளது.
தமிழன்பன்.......அது எந்த துறைகளில் விவசாயிகளுக்கான சேவையை விரிவாக்கியுள்ளது?
கலை.........நீங்கள் பாருங்கள். அடிப்படை சேவையான தொலை தொடர்பு மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தொலை பேசி தொடரமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அப்புறம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொலை பேசி தொடரமைப்பிலிருந்து வழங்கப்படும். அகன்ற அலைவரிசை இணையம் ஒவ்வொரு கிராமத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழன்பன்........அப்படியிருந்தால் இப்போது சான்துங் மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களும் அகன்ற அலைவரிசை இணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கலை.........நீங்கள் மதிப்பீட்டது சரிதான். இப்போது வேளாண் உற்பத்தி, வேளாண் உற்பத்தி பொருட்கள் புழக்கம், கிராம நிர்வாகம், விவசாயிகளுக்கான தகவல் சேவை போன்ற அலுவல தகவல்கள் அகன்ற அலை வரிசை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
தமிழன்பன்........விவசாயிகள் இணையத் தளத்தின் மூலம் வேளான் உற்பத்தி பொருட்களின் விற்பனையை நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம் நகர மற்றும் கிராமப்புற விவசாயிகளின் உறவும் வருமானமும் முன்னேற்றப்பட்டுள்ளது.
கலை.........ஆமாம். சான்துங் இணையத் தளத்தின் வளர்ச்சியை மீளாய்வு செய்யலாம்.
தமிழன்பன்........முன்பு சான்துங் மாநிலத்தில் தொலைதொடர்பு நிலைமை எப்படி இருந்தது?
கலை.........சான்துங் மாநிலம் 6 கோடியே 30 இலட்சம் விவசாயிகளை கொண்ட வேளான் மாநிலமாகும். அதன் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வளர்ச்சி சமமற்ற நிலையில் இருந்தது.
தமிழன்பன்........அப்போது தொலை தொடர்பு மிக பின்தங்கிய நிலையில் இருந்தது.
கலை.........1978ம் ஆண்டின் இறுதியில் முழு மாநிலத்திலும் 2 இலட்சத்து 24 ஆயிரம் தொலை பேசி வசதிகள் மட்டும் இருந்தன. அவை முக்கியமாக நகரங்களில் குவிந்து இருந்தன.
தமிழன்பன்........அவ்வேளை கிராமப்புறங்களில் தொலை பேசி வசதி மிக குறைவு என்று சொல்லலாமா?
கலை.........சொல்லலாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சின் 11வது தேசிய மாநாட்டின் 3வது முழு அமர்வு நடைபெற்ற பின் சான்துங் மாநிலத்தின் கிராமப்புறத்திற்கான தொலை தொடர்பு கட்டுமானம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.
தமிழன்பன்........1985ம் ஆண்டில் கிராமங்களில் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் குடுமபங்களில் தொலை பேசி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
கலை.........1990ம் ஆண்டில் தொலை பேசி வசதி பெற்ற விவசாயக் குடுங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை அடைந்தது.
தமிழன்பன்........1995ம் ஆண்டில் மாநிலத்தின் 17 நகரங்களிலும் மாவட்டங்களிலும் நகரையும் கிராமப்புறத்தையும் இணைக்கும் தொலை பேசி வலைப்பின்னல் பொருத்தப்பட்டுள்ளது.
கலை.........112 மாவட்ட நிலை நகரங்களிலும் 2402 வட்டங்களிலும் தன்னியங்க தொலை பேசி வசதி நனவாக்கப்பட்டுள்ளது.
தமிழன்பன்........9வது ஐன்தாண்டு திட்டத்தில் ஒலியிழை கம்பி வட தொலை தொடர்பு நெறி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
கலை.........2000ம் ஆண்டில் சான்துங் மாநிலத்தில் தொலை பேசி பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியது.
தமிழன்பன்........இந்த குடும்பங்களில் எல்லாம் அகன்ற அலை வரிசை இணைய வசதி பொருத்தப்பட்டுள்ளது தானே.
கலை.........இத்தகைய விரைவான தொலை பேசி வசதி வளர்ச்சி அகன்ற அலை வரிசை இணையத்தின் பங்காகும் என்று நாம் கூறலாம்.
தமிழன்பன்........ஆமாம். அதன் பங்கு சற்று விபரமாக எடுத்து கூறலாமே.
கலை.........மிகழ்ச்சி. கடந்த சில ஆண்டுகளில் சான்துங் மாநிலத்தின் தொலை தொடர்பு துறை விரைவான வளர்ச்சி காலத்தில் நுழைந்துள்ளது.
தமிழன்பன்........பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கிராமப்புறத்திலான தொலை தொடர்பு கட்டுமானத்திற்காக சான்துங் இணைய தளம் 1600 கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது.
கலை.........2006ம் ஆண்டு முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசவை ஆகியவை புதிய சோஷலிச கிராமப்புறத்தை நிர்ணயிப்பதென்ற முக்கிய தொலைநோக்கு திட்டம் மேற்கொண்டதை சான்துங் இணையத் தளம் வாய்ப்பாக பயன்படுத்தி உழைப்பாற்றல், நிதி, பொருட்கள் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறத்திலான தொலை தொடர்பை வளர்ச்சியடைய முயற்சித்துள்ளது.
தமிழன்பன்........அப்போது இன்னல் ஏதாவது எதிர்நோக்க வேண்டி இருந்ததா? இது பற்றி சற்று சொல்லலாமே.
கலை.........இம்முயற்சியில் நிதி பற்றாக்குறை, கட்டுமான நிகழ்ச்சியில் பல்வகை சிக்கலான அம்சங்கள், முதலீடு விரைவான இலாபம் பெறாமை, வியாபார தன்மையின்மை ஆகியவை காணப்பட்ட இன்னல்களாகும்.
தமிழன்பன்........சாதுன்துங் இணைய தளத்தின் பணியாளர்களின் கூட்டு முயற்சிகள் மூலம் தொலை பேசி வசதியை மேம்படுத்தும் அடிப்படையில் செல்லிட பேசி வசதியும் அகன்ற அலை வரிசை இணைய வசதியும் சீராக்கப்பட்டுள்ளன.
கலை.........இந்த முயற்சியுடன் சான்துங் மாநிலத்தின் அனைத்து கிராமங்களை இணைக்கும் பணித் திட்டதிற்கு ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழன்பன்........அதன் விளைவு என்ன?
கலை.........தற்போது மாநிலத்தின் 80 ஆயிரம் கிராமங்கள் அகன்ற அலைவரிசை இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. சான்துங் மாநில கிராமங்கள் அனைத்தும் அகன்ற அலை வரிசை இணையத்தால் இணைக்கப்படும் திட்டத்தை குறுகிய ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது.
தமிழன்பன்........மாபெரும் வளர்ச்சியுடன் இவ்வாண்டின் ஜனவரி திங்களில் சான்துங் மாநிலத்தில் இணைய தளத்தின் மூலம் அலுவலை கையாளும் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது.
கலை........அதேவேளையில் சான்துங் இணையத் தளம் பல்வேறு வாரியங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வேளாண் இயந்திரம், கால்நடை வளர்ப்பு, புதிய ரக கிராம மருத்துவ சிகிச்சை, கிராமப்புறத்திலான குடும்ப நல திட்டம், கிரரமப்புறத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான தொலை தூர கல்வி போன்ற பத்துக்கும் அதிகமான கிராம தகவல் சேவை இணைய தொடரமைப்பை நிறுவியுள்ளது.
தமிழன்பன்........தவிரவும், மாநில தகவல் அறிவிப்பு, இன்பமான விவசாயக் குடும்பம் 168, வேளாண் தொழில் நுட்ப நிபுணர்களிடமிருந்து தகவல் கேட்பது போன்ற நிகழ்ச்சிகள் இணையத் தளம் மூலமாக நடத்தப்படுகின்றன.
கலை.........இந்த பல்வகை சேவை நிகழ்ச்சிகளின் மூலம் சான்துங் இணையத் தளம் வேளாண்மை, கிராமப்புற தகவல் சேவை ஆகியவற்றை நடத்துவதன் மூலம் கிராமப் பொருளாதாரம் விரைவாகவும் பயன் தரும் முறையிலும் முன்னேற்றப்பட்டுள்ளது.
தமிழன்பன்........சரி நேயர்களே கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டது.
கலை.........அடுத்த நிகழ்ச்சியில் இணையத் தளத்தின் மூலம் சான்துங் மாநிலத்தின் விவசாய்கள் என்ன நலன் பெற்றுள்ளனர் என்பது பற்றி அறிமுகப்படுத்துவோம்.
தமிழன்பன்........நிகழ்ச்சியை கேட்க தவறாதீர்கள்.
கலை.........அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
தமிழன்பன்........வணக்கம் நேயர்களே.
|