• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 20:03:13    
குரங்கு வேடத்தில் பெண் கலைஞர்

cri

குரங்கு வேடத்தில் பெண் கலைஞர்

கலை என்பது மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. கலைத்துறையை சார்ந்தவர்கள் அதன் மூலம் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முடியும். அதில் முக்கிய பங்களிப்புகளை செய்து கொண்டிருப்பவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பர். ஒவ்வொரு நாட்டிற்கும் சிறப்பியல்பு வாய்ந்த கலைவடிவங்கள் உண்டு. சீனாவின் கலைவடிவங்களில் இசை நாடகம் மிகவும் புகழ் பெற்ற பாரம்பரிய கலைவடிவமாகும். இசை, நடனம், பாடல், உரை என பல வடிவங்களை உள்ளடக்கிய இக்கலைவடிவம் தமிழகத்தின் தெருகூத்துக்கு ஒத்ததாகும். Ningxia Hui தன்னாட்சி பிரதேச தலைநகர் Yinchuan னில் உள்ள 79 வயதான Yu Jian அம்மையார் இசை நாடகத்தின் பல்வகை வடிவங்களில் ஒன்றான பெய்சிங் இசை நாடகத்தில் அதிகமான பங்களிப்புகளை 60 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். தெருக்கூத்தில் வரும் கட்டியங்காரர் போல இசைநாடகத்தில் வருகின்ற கதாபாத்திரமான குரங்கின் அசைவுகளை மிக நன்றாகவே நிகழ்த்திக்காட்டும் திறமையை இவர் பெற்றுள்ளார். ஏழு வயதாக இருக்கும் போது பெய்சிங் இசை நாடகம் கற்றுக்கொண்ட Yu Jian, 10 வது வயதில் தமது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 60 ஆண்டுகால கலைப்பயணத்தில் 60 க்கு மேற்பட்ட இசை நாடகங்களில் அவர் பங்கேற்றுள்ளார். குரங்கு அரசர் என்ற கதாபாத்திரத்தை நடித்த ஒரே பெண் கலைஞர் அவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

உயிரை மீட்ட புத்திசாலிதனம்

சில வேளைகளில் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் விழிப்போம். குறிப்பாக இக்கட்டான வேளைகளில் கையும் காலும் ஓடவில்லை என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம் அல்லது அனுபவித்திருப்போம். இடர்பாடான நேரங்கள் பெரியவர்களின் இடர்காப்பு செயல்பாட்டு திறனுக்கு சவாலாக இருக்கும் போது, அப்படிப்பட்ட நேரங்களில் சில சிறுவர்களின் வீரதீர, புத்திசாலிதனமான இடர்நீக்கும் செயல்பாடுகள் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அத்தகைய ஒரு செயல்பாட்டை Zhejiang மாநில Xiaoshan மாவட்டத்தில் Hangzhou வை சேர்ந்த, நான்கரை வயதான Jiong fei என்ற சிறுவன் செய்துள்ளான். அவனுடைய புத்திசாலித்தனமான செயல்பாடு 4 வயதான சக விளையாட்டு தோழனின் உயிரை காப்பாற்றியுள்ளது. Jiong fei யும் Miaomiao யும் விளையாடிக் கொண்டிருந்த போது Miaomiao தவறி கிணற்றில் விழுந்து விட்டான். அதை பார்த்த Jiong fei அருகில் கிடந்த மூங்கில் தடியை எடுத்து கிணற்றில் போட்டு அதின் கொக்கியை Miaomiao யின் சட்டையில் மாட்டசெய்து அவனை நீரில் மூழ்காதவாறு மிதக்க செய்து பிடித்தபடியே உதவிக்காக கூக்குரல் செய்துள்ளான். அவனுடைய குரலை கேட்க மக்கள் உடனடியாக வந்து Miaomiao யை காப்பாற்றியுள்ளனர். சிறுவயதிலும் புத்திசாலிதனமான Jiong fei யின் செயல் உள்ளுர் மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.