• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 13:54:12    
தா ச்சியே கோயிலில் தேனீர் குடியுங்கள்

cri
மேற்கு பெய்ஜிங்கிலுள்ள புகழ்பெற்ற காட்சி இடமான கோடைக்கால மாளிகையிலிருந்து கார் மூலம் பத்து நிமிடம் நேரத்தில், மேற்கு மலையிலுள்ள தா ச்சியே கோயிலுக்கு சென்று விடலாம்.
தா ச்சியே கோயில், லியேள, மிங் மற்றும் ச்சிங் வம்சகாலங்களைக் கடந்து விட்டது. வம்சகாலங்களும் வரலாறும் மாறியிருந்த போதிலும், இக்கோயில், உயிரான பண்பாட்டுப் புதை படிவமாக, உயிராற்றல் நிறைந்து இருந்திருக்கும். இதில் உள்ளார்ந்த கீழை நாடுகளின் ஞானமும், சீனத் தேசத்தின் அயரா உழைப்பு, துணிவு, அமைதி ஆகிய எழுச்சியும், யூ லன் மலரைப் போன்று மலர்கின்றன என்றார் அவர்.

யூ லன் மலர், தா ச்சியே கோயிலின் அழகான காட்சியாகவும், அதன் சின்னமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு வசந்த காலத்திலும் இக்கோயிலில் யூ லன் பண்பாட்டு விழா, நடைபெறுகிறது. இங்குள்ள யூ லன் பண்பாட்டு விழா, மிகவும் புகழ்பெறுவதற்கு காரணம் என்ன, தெரியுமா?பெய்ஜிங் யான் சான் வெளியீட்டகத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் Zhao heng, தா ச்சியே கோயிலின் பண்பாட்டு மற்றும் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். இக்கோயிலில் இந்தப் பண்டைகால யூ லன் மரம், 300 ஆண்டுகால வரலாறுடையது என்று அவர் அறிமுகப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:
தா ச்சியே கோயிலின் முன்னாள் தலைமைக் குரு, சியாங் சி மாநிலத்தின் லூ சான் மலையிலிந்து இந்த யூ லன் மரத்தை கொண்டு வந்து நட்டார். அதனால், இது,

உள்ளூரின் யூ லன் மலர் அல்ல, தெற்கு பகுதியின் யூ லன் மரம் தான். சிங் வம்சகாலத்தில் இங்கு கொண்டு வரப்பட்ட யூ லன் மரம், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்களில் மலர்கிறது. இலக்கியத்தில், இந்த யூ லன் மரத்தை பற்றி எழுதிய கவிதைகள், மிகவும் அதிகம் என்றார் அவர்.
ஒவ்வொரு வசந்தக்காலத்திலும், இந்த பண்டைய யூ லன் மரம், மலர்ந்து வருகிறது. அதன் தோற்றம், நிறம், மணம் ஆகியவை, பெய்ஜிங்கில் தலைச்சிறந்தவை.
1997ம் ஆண்டில், தா ச்சியே கோயிலின் வளாகத்தில், மிங் குவேய் என்னும் தேனீரகம், நிறுவப்பட்டது. கோயிலின் வளாகமெங்கும், தேனீரகங்கள் உள்ளன. சாவ் சிங் உணவகமும் நிறுவப்பட்டுள்ளது. ஒத்துக்கிவைக்கப்பட்டுள்ள அறைகள், விருந்தினர்

அறைகளாகவும், ஆடம் பரமான சோகுசு அறைகளாகவும் சீராக்கப்பட்டன. தவிர, இக்கோயில், கூட்டம் நடத்தும் அறையையும், இதர பொழுதுப்போக்கு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது. கோயிலின் வளாகத்தில், மிங் குவாய் தேனீரகத்தைச் சேர்ந்த சாய்வு நாற்காலிகளும், மேசைகளும் வைக்கப்பட்டுள்ளன. தேனீர் மற்றும் மலர்களின் மணமும், பண்டைகால மரத்துடன் இணைந்து, தா ச்சியே கோயிலின் தனிச்சிறப்பியல்பாக மாறியுள்ளன.
தா ச்சியே கோயிலில் ஆண்டின் நான்கு பருவ காலங்களிலும், வேறுபட்ட காட்சிகளைக் காணலாம். தற்போது, பயணிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது,

பெய்ஜிங்கில் வசந்தக்காலம். யூ லன் மலர் மிகவும் அழகாக இருக்கிறது. இங்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள், மகிழ்ச்சியடைகின்றனர். பயணியர் ஜியா மின் கூறியதாவது:
தா ச்சியே கோயில், அமைதியான அருமையான இடமாகும். ஆண்டுக்கு சில முறை, நாங்கள் வருகின்றோம். இங்குள்ள ஊற்று நீர், மரங்கள் முதலியவை நன்றாக இருக்கின்றன என்றார் அவர். 
இயற்கை காட்சிகளைப் பார்வையிடுவதோடு, பெய்ஜிங்கின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்ந்துக் கொள்ள விரும்பினால், தா ச்சியே கோயிலுக்கு பயணம் செய்யலாமே.

இனி, சுற்றுலா தகவல்கள்:
தா ச்சியே கோயில், பெய்ஜிங்கின் சி சான் மலையில் அமைந்துள்ளதால், காற்று அதிகம், மனிதர்கள் குறைவு, காலநிலை ஒப்பீட்டளவில் குளிராக இருக்கிறது. அதனால் வசந்தக்காலத்தில் இங்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவது நல்லது.
நேயர்கள் இதுவரை, பெய்ஜிங்கின் மேற்கு புறநகரத்திலுள்ள தா ச்சியே கோயிலை பற்றி கேட்டீர்கள்.