• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 15:25:59    
பத்திரமாக வெளியேறிய வெளிநாட்டு பயணியர்

cri
மே 12ம் நாள் பிற்பகல் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சியூ ச்செ கோ என்னும் இயற்கை காட்சி இடத்தில் தங்க வைக்கப்பட்ட 6000க்கும் அதிகமான வெளிநாட்டு மற்றும் சீன பயணிகளில் 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஏனையோர் இன்றுக்குள் இடம் மாற்றப்படுவர் என்று சீன அரசு சுற்றுலா ஆணையத்தின் பேரிடர் நீக்க மீட்புதவி ஒருங்கிணைப்பு குழு இன்று அதிகாலையில் அறிவித்த செய்தி கூறியது.
நிலநடுக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட சியூ ச்செ குவான் லுங் விமான நிலையம் இப்போது தனது இயக்கத்தை மீட்டுள்ளது. அங்கே தங்க வைக்கப்பட்ட பயணியர்கள் இன்று முற்பகல் விமானம் மூலம் அங்கிலிருந்து வெளியேறினர் என்று தெரியவருகின்றது.
14ம் நாள் இரவு 7 மணிவரை பத்தாயிரத்து 386 பயணியர்கள் அடங்கிய 506 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அணிகள் நிலநடுக்கத்தால் இயற்கை காட்சி இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன என சீன அரசு சுற்றுலா ஆணையத்தின் கள ஆய்வு அறிவித்தது.