15ம் நாள் பிற்பகல் 3 மணி வரை சுமார் 40 ஆயிரம் கூடாரங்கள் 50 ஆயிரம் போர்வைகள், பஞ்சா சட்டைகள் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏனையவை இன்றும் நாளையும் அங்கே அனுப்பப்படும். சீனப் பொது துறை அமைச்சகத்தின் இழப்பு குறைப்புக்கான பொறுப்பாளர் சான் சியௌ நின் நமது செய்தியாளர்களுக்கு இதை அறிவித்தார்.
அவர் கூறியதாவது பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் வகையில் பொது துறை மற்றும் நிதி அமைச்சகங்கள் இன்று அவசர கௌள்வனவு ஒழுங்கை துவக்கி தொடர்புடைய தொழிற்சாலைகளிடமிருந்து கூடாரங்கள், போர்வை, பஞ்சாட்டைகள், விளக்குகள், எளிமையான கழிவறைகள் ஆகியவற்றை வாங்கி மிக விரைவாக பிரதேசங்களுக்கு அனுப்பும் என்று அவர் கூறினார்..
|