• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 19:00:05    
பேரிடரைச் சமாளிக்கும் சீனாவின் திறன்

cri
சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவையில் 7.8 பதிவான கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பிறகு, சீனா, முன்கண்டிராத வேகத்திலும் பெருமளவிலும் மீட்புதவியை மேற்கொண்டு வருகிறது. நில நடுக்கப் பேரிடரைச் சந்தித்தவுடன், அவசரகால நடவடிக்கை, அமைப்பு ஒருங்கிணைப்பு, இதர நடவடிக்கைகள் ஆகியவற்றில், சீன அரசின் செயல்பாடுகள், உள்நாட்டு மக்களின் ஆதரவையும் சர்வதேச சமூகத்தின் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்த மீட்புதவி பணியில், சீனாவின் வேகமான நடவடிக்கை திறன் முதன்முதலில் காட்டப்பட்டது. நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் உடனடியாக அவசர பேரிடம் நீக்க கட்டளையிட்டார். தலைமையமைச்சர் வென்சியாபாவ் ஒன்றரை மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். நாடு முழுவதிலும் பரவியுள்ள பேரிடர் எதிர்ப்பு வாரியங்கள், அடுத்தடுத்து அவசர திட்டங்களைத் தொடங்கின. இது குறித்து, ஐ.நாவின் பேரழிவு குறைப்புக்கான சர்வதேச உத்தி அமைப்பின் செயக இயக்குனர் பிரிசேனோ கூறியதாவது:

அழிவைச் சமாளிப்பதற்கான சீன அரசின் வேகம், வியப்பயடைய வைத்தது. நில நடுக்கம் நிகழ்ந்த 4 மணி நேரத்துக்குள், மீட்புதவியாளர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தனர் என்பதை, தொலைக்காட்சியில் பார்த்தேன். சீன அரசின் விரைவான நடவடிக்கை, என் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றார் அவர்.

சீனாவின் வலுமையான ஒருங்கிணைப்பு திறன், மீட்புதவி பணியில் எடுத்துக்காட்டப்பட்டது. நில நடுக்கம் நிகழ்ந்த பின், சீன நில நடுக்க ஆணையம், பொது துறை அமைச்சகம், சீன மக்கள் விடுதலைப்படை, ஆயுத காவற்துறை தலைமைக்குழு, மருத்துவ, போக்குவரத்து, தொலைத்தொடர்பு முதலிய வாரியங்கள் வேகமாக சேர்ந்து கூட்டாக மீட்புதவி செய்ததால், பெருமளவிலான மீட்புதவியாளர்களும் பொருட்களும் குறுகிய நேரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுழைந்துள்ளனர். அத்துடன், சீன சமூகத்தில் பெருமளவில் நன்கொடையைத் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14ம் நாள் பிற்பகல் 4 மணி வரை, பல்வேறு துறைகள் வழங்கிய நன்கொடைத்தொகையும் பொருட்களும், 87 கோடியே 70 லட்சம் யுவான் மதிப்புடையவை. லாபமின்றி இயங்கும் சர்வதேச அமைப்பான குழந்தைக்களுக்கு உதவி அளிக்கும் சங்கத்தைச் சேர்ந்த சீனத் திட்டப்பணியின் தலைமைப் பிரதிநிதி வென்தேம் ஜேம்ஸ் பேசுகையில், இக்காலத்தில், சீனாவைப் போன்று மூலவளங்களையும் கவனத்தையும் குவிக்கும் அரசு மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.

நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் கேட்கின்ற மீட்புதவி பணி ஒலியாகும்.

இந்த மீட்புதவி பணியில், சீனாவின் உயர் பயனுள்ள நடவடிக்கை திறன் காட்டப்பட்டுள்ளது. மோசமான காலநிலை, கடுமையான பாதை இழப்பு ஆகிய நிலைமையில், மீட்புதவி அணிகள், இன்னல்களைச் சமாளித்து, காலதாமதமின்றி பயனுள்ள மீட்புதவியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்த மீட்புதவி மூலம், தகவல் திரட்டல் மற்றும் செய்தி வெளியீட்டில் சீனாவின் திறனை, வெளியுலகம் கண்டுள்ளது. நிலநடுக்கம் நிகழ்ந்த 10 நிமிடத்துக்குள், தேசிய நிலநடுக்க ஆணையம், தொடர்புடைய செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிலையம், பேரிடர் நீக்க மீட்புதவிப்பணியின் முழுமையான நிலையை இடைவிடாமல் ஒளிபரப்பி செய்து வருகின்றது. அதிகாரப்பூர்வ செய்திகள் காலதாமதமின்றி வெளியிடப்படுவதால், பொது மக்கள் விரைவாக உண்மையைத் தெரிந்து கொண்டு, பீதி அடைவது, தவிர்க்கப்படுகிறது.

தற்போதைய பேரிடர் நீக்க மீட்புதவி நிலைமையைப் பார்த்தால், உடனடி நடவடிக்கை, சமூக அணி திரட்டல், தகவல் வெளியீடு ஆகியவற்றில், சீன அரசு, பக்குவமடைந்த மனப்பான்மையைக் காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதோடு, சீன மக்கள் நிலநடுக்கத்தைச் சமாளித்து, பேரிடரை நீக்கும் நம்பிக்கையும் துணிவையும் ஊக்குவிக்கிறது. தீமையை எதிர்நோக்கிய, சீன சமூகம் நிதானத்தை நிலைநிறுத்தி வருகிறது. சீன அரசின் நிர்வாக திறன் வலுப்படுவதை, இவை பிரதிபலித்துள்ளது.

சர்வதேச சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ச்சயிப் அம்மையார் சீனாவின் மீட்புதவி பணியில், நம்பிக்கை கொண்டார். அவர் கூறியதாவது:

மீட்புதவி பணியில் நம்பிக்கை கொள்வது உறுதி. தற்போது, சீனா, பெரிய நாடாகும். மீட்புதவி அனுபவங்களையும் நிபுணர்களையும் அதிகமாக கொண்டுள்ளது. நிவாரண பணியை செவ்வனே செய்யும் திறனை சீனா அதிகமாக வெற்றிருப்பதை நம்புகின்றேன் என்றார் அவர்.