15ம் நாள் காலை 8மணி வரை, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், சீன ஆயுதக்காவற்துறையினரும் அதிகாரிகளும், 60ஆயிரத்துக்கு அதிகமான காயமுற்றோரை காப்பாற்றினர். 50ஆயிரம் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
உயிர்த் தப்பி பிழைத்தோதை காப்பாற்றுவதே, 15ம் நாளன்றைய அனைத்து மீட்புதவிப்படைகளின் முக்கிய கடமையாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 58 வட்டங்கள் அனைத்திலும் கிராமப்புறங்களிலும், மீட்புதவிப் படையினர் நுழைந்துள்ளனர்.
தவிரவும், 15ம் நாள் நண்பகல், சிச்சுவான் வொலுங் இயற்கை சுற்றுலா இடத்தில் தங்க வைக்கப்பட்ட பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 33 பயணியர்கள், ராணுவ ஹெலிகாப்டரின் மூலம், செங்து நகரை பாதுகாப்பாக சென்றடைந்துள்ளனர்.
|